இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் சமூகவிவகார பிரிவின் கல்முனை கிளை ஏற்பாடு செய்த "மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" என்ற கருப்பொருளில்  மர  நடுகையும் மரக்கன்றுகள் விநியோகம் செய்யும் நிகழ்வும் இன்று (28.10.2017)கல்முனை மஸ்ஜிதுல் ஹைராத் பள்ளிவாசலில் இடம் பெற்றது .

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின்  கல்முனை கிளை பொறுப்பாளர் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு பள்ளிவாசல் வளாகத்தில் மரம் நட்டு  வைத்ததோடு பள்ளிவாசல் மஹல்லாவை சேர்ந்த முஸ்லீம் தமிழ் மக்களுக்கும் , பொது நிறுவனங்களுக்கும்   மரக்கன்றுகள்  வழங்கி  வைத்தார் 

கல்முனை  அல் -பஹ்ரியா மகாவித்தியாலய அதிபர் ரசாக் ,கல்முனை  அல் -மிஸ்பாஹ் மகாவித்தியாலய அதிபர் அமீன் உட்பட இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின்  கல்முனை கிளை  உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் கருத்துரையிடுக

 
Top