இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு  சபையினால் நடத்தப்பட்ட கிரிக்கட் நடுவர்களுக்கான போட்டிப் பரீட்சையில் தேசிய ரீதியாக தரம் ஐந்து நடுவராக சித்தி பெற்ற நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய
மகாவித்தியாலய விளையாட்டு ஆசிரியர் அபூபக்கர் முகம்மட் றிலாஸ் நடுவராக நியமிக்கப் பட்டுள்ளார் .

கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலங்க சுமதிபால பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிகழ்வு ஆர்.பிரேமதாச கிரிக்கட்  மைதான விளையாட்டு அரங்கில் அண்மையில் நடை பெற்றது.  உள்ளூர் கிரிக்கட் போட்டி நடவடிக்கைகளின் தலைவர் சிந்தக்க எதிர்மன்னவினால்    நியமனக் கடிதம்  வழங்கி வைக்கப் பட்டது.

நற்பிட்டிமுனை மண்ணுக்கு இந்தக் கெளரவத்தை பெற்றுக் கொடுத்த  முகம்மட் றிலாஸ் நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பினால் பாராட்டி கெளரவித்து பொன்னாடை போர்த்தி தேசபிமான விளையாட்டு செம்மல் விருது வழங்கி கெளரவித்தனர் .

கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சி.எம். முபீத்தின்  நெறிப்படுத்தலில் நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் அமைப்பாளரும் வர்த்தக வணிக அமைச்சரின் இணைப்பாளருமான சி.எம்.ஹலீம் தலைமையில் நற்பிட்டிமுனை அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின்  செயலாளர் யு.எல்.எம்.பாயிஸ் , சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.எல்.ஏ.நாஸீர் ஆகியோர் கலந்து கொண்டு இந்த கெளரவத்தை வழங்கினார்கள் கருத்துரையிடுக

 
Top