(பி.எம்.எம்.ஏ.காதர்)
வங்காள விரிகுடா கடலில் இன்று(17-10-2017)கடும் காற்றும் கடல் கொந்தளிப்புமாக இருந்தது.மருதமுனை கடல் பரப்பில் மீன் பிடிக்கச் சென்ற மருதமுனையைச் சேர்ந்த மீனவர்கள் பயணித்த கரவலைத் தோணியொன்று காலை 11 மணியளவில் கடலில் மூழ்கியது அதில் பயணித்தவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள் பெரும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் தோணியையும் அதில் பயனித்தவர்களையும் பொது மக்கள் 1.30 மணியளவில் கரைசேர்த்தனர்.கல்முனை பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து வந்து நிலைமைகளை அவதானித்தனர். 

கருத்துரையிடுக

 
Top