105 வருடங்களை தாண்டிய மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா கல்லூரியின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக இடம் பெற்று வருகிறது
சூழலை பாதுகாப்பாக வைத்திருக்கும் வகையில் சிரமதானப் பணிகளும், சமூக சேவையாக இரத்த தானம் வழங்கும் நிகழ்கவுளும் இடம் பெற்று கடந்த செவ்வாய்க்கிழமை மனாரியன்களின் நூற்றாண்டு விழா நடை பவனியும் நடை பெற்றது.
1500க்கும் மேற்பட்ட பழைய மாணவர்கள் கல்லுரி வளாகத்தில் ஒன்று சேர்ந்து கல்லூரியிலிருந்து சீருடை அணிந்த வண்ணம் கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக பாண்டிருப்பு ஊடாக கல்முனை நகரை அடைந்து மீண்டும் கல்லூரியை சென்றடைந்தனர்.
மனாரியன் அணிநடை பிரிவு பேண்ட்வாத்திய குழு, மானாரியன் குதிரைப்படைப் பிரிவு என்பன ஊர்வலமாக மனாரியன் கொடிகளை ஏந்திய வண்ணம் ஊர்வலமாக சென்றனர்.கருத்துரையிடுக

 
Top