சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக பி.எஸ்.எம். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் பணிப்பிற்கு அமைய, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய திருமதி சார்ள்ஸ், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திலுள்ள உத்தியோகத்தரான திருமதி சார்ள்ஸ், கடந்த 26 வருடங்களாக அரச சேவையில் பணிபுரிந்து வருகிறார். வவுனியாவின் பிரதி அரசாங்க அதிபராகவும் அவர் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
யாழ். பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர், பேராதனை மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகங்களில், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் வர்த்தக வர்த்தக நிர்வாகம் ஆகிய பிரிவுகளில் இரு முதுமாணி பட்டங்களை பெற்றுள்ளார்.
 
இதேவேளை, ஏற்கனவே சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய டப்ளியூ.ஏ. சூலாநந்த பெரேரா, பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top