உலகறிந்த எழுத்தாளர் கல்முனையை சேர்ந்த சோலைக் கிளி என்றழைக்கப்படும் அதீக் எழுதிய மண் கோழி, நெடுப்பமாய் இழுத்த பந்தல் என்ற இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா கடந்த செவ்வாய்க்  கிழமை  கல்முனை அல்-மிஸ்பாஹ் மகாவித்தியாலய மண்டபத்தில் நடை பெற்றது.

நெடுப்பமாய் இழுத்த பந்தல் நூலை உலகறிந்த எழுத்தாளர் உமாவரதராஜனும் மண் கோழி என்ற கவிதை நூலை எழுத்தாளர் ஹனிபா இஸ்மாயிலும் விமர்சன உரை நிகழ்த்தி நூலை வெளியிட்டு வைத்தனர். நூலின் முதல் பிரதிகளை அமைச்சர் ரவூப் ஹக்கீம் பெற்றுக் கொண்டு எஸ்.எஸ்.றகுமத்தல்லா மற்றும் ஓய்வு  பெற்ற ஆசிரியர் ஏ.எம்.ஹனீபா, உமாவரதராஜன்  ஆகியோருக்கு  வழங்கி வைத்தார்.

எழுத்தாளர்களான சத்தார் எம்.பிரதௌஸ்றி, ஸாட் சரீப் , எஸ்.நளீம் ஆகியோரால் தொடக்க உரை நிகழ்த்தப்பட்டு 

அமைச்சர் ரவூப்ஹக்கீம் , வெளி நாட்டு அலுவல்கள்  அமைச்சின் சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.ஏ.அஸீஸ் , தென்  கிழக்கு பல்கலைக்கழக தமிழ் துறைத் தலைவர் றமீஸ் அப்துல்லா, வைத்தியர்களான ஆர்.முரளீஸ்வரன்,  புஸ்பலதா லோகநாதன், உட்பட்ட முக்கியஸ்தர்கள் பலாரார் நூல் பற்றிய சிறப்புரை நிகழ்த்தப்பட்டது

நிகழ்வின் ஏற்புரையை நூல் எழுத்தாளர்  சோலைக்கிளி வழங்கி வைக்க நிகழ்வை கவிஞர் மன்சூர் ஏ காதர் தொகுத்து வழங்கினார்.

நிகழ்வில் கல்விமான்கள்,  புத்திஜீவிகள் ,பேராசிரியர்கள், இலக்கியவாதிகள ,அரசியல்வாதிகள்; அடங்கலாக பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் 

கவிஞர்  அன்புதீனும் அவரது பாரியாரும் சோலைக்  கிளிக்கும்  அவரது பாரியாருக்கும் பொன்னாடை போர்த்தி கெளரவம் வழங்கினர் 


கருத்துரையிடுக

 
Top