இந்தோனேசியாவில் நடை பெற்ற சர்வதேச இளம் கண்டு பிடிப்பாளர்களுக்கான போட்டியில்  சர்வதேச ரீதியில் தங்கப் பதக்கம் வென்ற கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவன் மொஹமட் ஸவ்பத்துக்கு  கல்முனை வலயக்கல்விப்  பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பாராட்டு தெரிவித்துள்ளார் .
கல்முனை ஸாஹிரா கல்லூரி அதிபர் மற்றும் மாணவனை வழிப்படுத்திய ஆசிரியர்கள் அவருக்கு ஊக்கம் வழங்கிய அவரது பெற்றோர்கள் அனைவருக்கும் வாழ்த்தும் பாராட்டும்  தெரிவிப்பதாக வலயக்கல்விப் பணிப்பாளர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார் .
மாணவன் மொஹமட் ஸவ்பத் பெற்றுள்ள தங்கப்பதக்கம் கல்முனை கல்வி வலயத்துக்கும் , கிழக்கு மாகாணத்துக்கும்  ,கல்முனை ஸாஹிராவுக்கும் மொத்தத்தில் நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக வலயக்  கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார் 

கருத்துரையிடுக

 
Top