கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் கல்முனையில் ஆதங்கம் !!

உண்மையான நல்லாட்சி என்று கூறுகின்ற விடயம் வெறுமனே வார்த்தைகளால் மாத்திரம் இருப்பதனால் உண்மையான நல்லாட்சியை மக்களுக்கு நிதர்சனமாக காட்ட முடியாமல் இருக்கின்றோம் .அதற்காக நாங்களும் திண்டாடுகின்றோம் . நாங்களும் நல்லாட்சி பற்றிப் பேசிக் கொண்டு எங்களை நாங்களே ஏமாற்றிக் கொள்கிறோமா என்ற உணர்வு எங்களுக்கு உள்ளது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் கல்முனையில்  ஆரம்பித்து வைத்த கிழக்கு மாகாண விவசாயக் கண்காட்சி நிகழ்வில் குறிப்பிடடார் 

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் கிழக்கு மாகாணத்தில் விவசாயத்துறையை முன்னேற்றுவதற்கு மத்தியஅரசு .தடையாக இருக்கின்றது. மத்திய அரசு நிதி தர மறுக்கின்றது. விவசாய திணைக்களத்தின் அதிகாரத்தை மத்திய அரசு வைத்துக் கொண்டுள்ளது. 

அதிகார பகிர்வு என்று கூறிக் கொண்டு இருக்கின்ற மத்திய அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்காக இரவோடு இரவாக திருத்தங்களை செய்ய முடியும் என்றால் இவ்வாறான சிறிய விடயங்களை செய்யாமல் இருப்பது நல்லாட்சிக்கு நல்லதல்ல என்றார். 

நிகழ்வில் வடமாகண சபை முதல்வர் சி.வி.சிவஞானம் உட்டபட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர். முதல் நாள் கண்காட்சியில் பாடசாலை மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். இக்கண்காட்சி தொடர்ந்து மூன்று தினங்கள் நடை பெறவூள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கிழக்கின் எழுச்சி என்ற கருப் பொருளில் கிழக்கு மாகாண சபையினால் முன்னெடுக்ககப்பட்டு வரும் விவசாயக் கண்காட்சி இவ்வாண்டு அம்பாறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை  (22) கல்முனை உவெஸ்லி கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விவசாயக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு முதலமைச்சர் கூறினார் 

கருத்துரையிடுக

 
Top