பாராட்டி கெளரவித்தார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் எம்.இராஜேஸ்வரன் .  

தெற்காசிய கராத்தே தோ சம்மேளனம் நடாத்திய நான்காவது தெற்காசிய கராதே சம்பியஷிப் போட்டித் தொடரில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் தொடர்ச்சியாக 3 தங்கப் பதக்கங்களை வென்று கல்முனை சேனைக்குடியிருப்பை  சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் இலங்கை கராத்தே வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். 

தமிழனுக்கு  புகழ் சேர்த்த தங்க மகன் என அவரை பாராட்டி வாழ்த்துப்  பா  வாசித்து  மாலை  அணிவித்து பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர்  எம்.இராஜேஸ்வரன் .  
இந்த  நிகழ்வு நேற்று மாகாண சபை உறுப்பினரின் அலுவலகத்தில் ஊடகவியலாளர்  எஸ்.பேரின்பராசா தலைமையில் இடம் பெற்றது. பாலூராஜின் தாய் அன்னம்மா சௌந்தரராஜாவும் கலந்து கொண்டார் 
இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் முதன் முறையாக நடைபெற்ற 4ஆவது தெற்காசிய கராத்தே தோ சம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த சனிக்கிழமை (05) கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.
இதில் ஆண்களுக்கான சிரேஷ்ட பிரிவில் காட்டா(Kata) போட்டியில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாகவும் சௌந்தரராஜா பாலுராஜ் தங்கப் பதக்கம் வென்றார்.  முன்னதாக 2014ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய கராத்தே தோ சம்பின்ஷிப்பில் அவர் தங்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top