வைத்திய அதிகாரி எம்.ஏ.சி.எம். பஸால் 

குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டாமல் புட்டிப்பால் வழங்குவதன் மூலம் உலகத்தில் வருடாந்தம் 08 மில்லியன் குழந்தைகள் மரணமடைவதாகவும் , உலகில் குழந்தைகளுக்கான நோய்  எதிர்ப்பு சக்தி கொண்ட மருந்து தாய்ப்பாலை தவிர வேறு எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தாய் சேய் நல  வைத்திய அதிகாரி எம்.ஏ.சி.எம். பஸால்  தெரிவித்தார்.

நிலைபேறான  தாய்ப்பாலூட்டலை  ஊக்குவிப்போம் என்ற தொனிப்பொருளில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட  உத்தியோகத்தர்களுக்கான விழிப்பூட்டல்  செயலமர்வு  இன்று  (09) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.அலாவுதீன் தலைமையில் நடை பெற்து.

  தாய் சேய் நல  வைத்திய அதிகாரி எம்.ஏ.சி.எம். பஸால் , கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை உத்தியோகத்தர்கள்  கலந்து கொண்டனர் . தேசிய தாய்ப்பாலூட்டல் வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வில் வளவாளராக கலந்து கொண்டு தாய் சேய் நல  வைத்திய அதிகாரி எம்.ஏ.சி.எம். பஸால் தொடர்ந்து உரையாற்றுகையில் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தவிர்த்து புட்டிப்பால் ஊட்டுவதால் குழந்தைகளுக்கும்,தாய்மாருக்கும் பல்வேறுபட்ட நோய்  ஏற்படுவதாகவும்  குறிப்பாக  கல்முனை பிராந்தியத்தில் வருடாந்தம் 50 கோடி ரூபாவுக்கு அதிகமான பணம் புட்டிப்பாலுக்கு செலவு செய்யப்படுவதாகவும் ஆய்வுகளில் தெரியவந்திருப்பதாகவும் குறிப்பிட்டார் 

கருத்துரையிடுக

 
Top