(அகமட் எஸ். முகைடீன்)

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சட்டத்தரணி ரோஹித போகல்லாகம புதிய கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் ஆளுநர் பதவிக்கு மிகவும் பொருத்தமான ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதையிட்டு பெருமகிழ்வடைவதாகவும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

பிரதி அமைச்சர் ஹரீஸ் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கையில், மாகாணத்தில் ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மாகாண ஆளுநர் மாகாணத்தின் நிறைவேற்றாளராக செயற்படுகின்றார். அந்தவகையில் அனுபவமும் ஆற்றலும் மிக்க ஒருவர் கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதனால் கிழக்கு மாகாணத்தின் நடவடிக்கைகள் மேலும் சிறப்பாக அமைவதற்கு வழிவகுப்பதோடு, எதிர்காலத்தில் கிழக்கின் நிர்வாக கட்டமைப்பு மேன்மையடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 

வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றியதன் மூலம் பல்தேசத்தவர்களுடனும் இலங்கை நாட்டின் உறவை வலுப்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்த முன்னாள் அமைச்சர் ரோகித போகல்லாகம கிழக்கு மாகாண ஆளுநராக செயற்படவுள்ளமை  கிழக்கிற்கான வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. சகல இனத்தவர்களோடும் நல்லுறவைப் பேணும் அவரின் சேவைக் காலம் சிறப்பாக அமைவதற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

 
Top