கல்முனை வலயக் கல்வி அலுவலக முறைசாராக் கல்விக்குரிய உதவிக்  கல்விப்  பணிப்பாளராக  மருதமுனையை சேர்ந்த  ஆசிரிய ஆலோசகர் ரீ.எல்.ஹபீபுல்லாஹ்  கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் இந்த நியமனம்  வழங்கப் பட்டுள்ளது . 

இம்மாதம் முதலாம் திகதியிடப்பட்டு வழங்கப் பட்டுள்ள நியமனக் கடிதப் பிரகாரம்  நேற்று திங்கட் கிழமை கல்முனை வலயக் கல்வி   அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

மருதமுனை ஷம்சுல் இல்ம் வித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வி கற்று இடைநிலைக் கல்வியை அல் -மனார்  மத்திய கல்லூரியிலும்  உயர் கல்வியை ஷம்ஸ்  மத்திய கல்லூரியிலும்  யாழ் பல்கலைக்கழகத்தில்  முகாமைத்துவ பீட  வியாபார நிருவாக கற்கை நெறியில்  சிறப்பு பட்டம் ரீ.எல்.ஹபீபுல்லாஹ்  1990 ஆம் ஆண்டு  பட்டதாரி ஆசிரியராக  தான் கல்வி கற்ற ஷம்ஸ்  மத்திய கல்லூரியில் முதல்  ஆசிரியர் நியமனம் பெற்றார்.
பட்டப்பின்   கல்வி டிப்ளோமா கற்கை நெறியில் சிறப்பு சித்தி பெற்ற இவர்  2000ஆம் ஆண்டு கல்வி முதுமாணி நெறியை கற்றுத் தேர்ந்தார்.2004ஆம் ஆண்டு கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் முறைசாராக்கல்விக்குரிய  சேவைக்கால ஆசிரியஆலோசகராக  கடமையேற்ற இவர் 2015 இல் ஆசிரியர் கல்விக்கான  முதுமானிப் பட்டத்தை  இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் பெற்ற  இவர்  சாம ஸ்ரீ சமூக ஜோதி, இரத்தின தீப விருதுகளையும் பெற்று  ஒரு சமூக நேயனாக விளங்குகிறார் 

இவ்வாறு கல்வித்துறையில்  மேலோங்கி செல்லும் ரீ.எல்.ஹபீபுல்லாஹ் இம்மாதம் ஜூன் முதலாம் திகதி முதல் கல்முனை வலயக்  கல்வி அலுவலகத்தில் உதவிக்கல்விப்  பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளார் .

கருத்துரையிடுக

 
Top