PMMA.Cader                                            தலைவர் .எம்.அஹூவர்
அண்மையில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களப் பணிப்பாளர் எம்..P நிஸாம் மேற்கொண்ட ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் ஆட்சேபனைகளும் மறுப்புக்களும் பலரினால் எழுப்பப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கதாகும். இந்த இடமாற்றம் தொடர்பில் இலங்கை மகா ஆசிரியர் சங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அவை பற்றி அதன் தலைவர் .எம்.அஹூவர் ஆசிரியர் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது  'அண்மைய வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் கல்முனை கல்வி வலயத்தில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கியதில் ஏற்பட்டுள்ள அநீதிகள் குறித்து நியாயம் கேட்கும் வகையில் கல்முனை மாகாண மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கான பதிவை மேற்கொண்டுள்ளோம்.
அதுமாத்திரமன்றி கடந்த புதன் கிழமை (24.05.2017)கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் அவரின் இணைப்புச் செயலாளர் உள்ளிட்ட சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தோம்.
அந்தச் சந்திப்பின் போது பாலூட்டும் ஆசிரியர்கள்; கணவன் மனைவி அரச உத்தியோகத்தில் ஈடுபடுபவர்கள்; ஆசிரிய பெற்றோர்களின் அரவணைப்புக்குட்பட்ட குழந்தைகள் இந்த வருடம் தரம் ஒன்று கற்பிக்கும் ஆசிரியர்கள் அடுத்த வருடம் தரம் இரண்டுக்கு கற்பிக்க வேண்டிய நியதியை இந்த இடமாற்றம் துஷ்பிரயோகம் செய்துள்ளது.
இது போன்ற பல்வேறு முறைகேடுகளைக் கொண்டு அண்மைய இடமாற்றம் நிகழ்ந்துள்ளது. இவைகளுக்கு அப்பால் தாபன விதிக்கோவை, கிழக்கு மாகாண அரச சேவைக்கான தாபன நடைமுறை ஒழுங்கு விதிக்கோவை, கல்வி அமைச்சின் சுற்று நிரூபங்கள் போன்றவற்றின் முன்மொழிவுகளை மீறியதாகவும் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
இவைகள் மாத்திரமன்றி இரண்டுவிதமான இடமாற்றங்களை இது கொண்டுள்ளது.
1.    கல்முனை வலயத்தைச் சார்ந்த ஆசிரியர் தமது முதலாவது நியமனக்காலத்தின் போது கல்முனை வலயத்திற்கு வெளியே கடமையாற்றவேண்டிய வருடத்தை பூர்த்தி செய்யாது, அதற்கு முன்னர் கல்முனை வலயத்திற்கு இடமாற்றம் பெற்று வந்தவர்களை அந்த காலகட்டத்தை நிறைவு செய்யும் வகையில் அவர்களை மீண்டும் வெளிவலயத்திற்கு அனுப்பப்பட்டுள்ளமை. இதிலும் குpறிப்பாக இன்னொன்றை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. குறிப்பாக வெளிவலயத்தில் 60 மாதங்களை பூர்த்தி செய்ய வேண்டிய ஒருவர் 57 மாதங்களை நிறைவு செய்த நிலையில் உள்ள ஒருவருக்கு மீண்டும் நான்கு வருடங்கள் வெளி வலயத்திற்கு கடமையாற்ற வழி செய்யும் வகையிலும்; இந்த இடமாற்றம் நிகழ்ந்திருப்பது பெரும் அநீதியாகும்.
2.    கல்முனை கல்வி வலயத்தைச் சேர்ந்த ஒருவர் இதுவரை வெளி வலயத்தில் கடமையாற்றாதவர்களை கடமையாற்றுமாறும் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் இடமாற்றம் செய்யப்படுவது அங்கீகரிக்கப்பட்ட நடைமுறை அல்லவென்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த இடமாற்றத்தின் காரணமாக பின்வரும் அசௌகரிகங்களையும் எமது ஆசிரியர்கள் அனுபவித்தும் நிலையும் ஏற்படுகின்றது.
போக்குவரத்து சிரமங்களை ஏறபடுத்தும் வகையில் இந்த இடமாற்றம் நிகழ்ந்துள்ளது. உதாரணமாக மருதமுனையைச் சேர்ந்த ஒருவருக்கு இறக்காமத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகின்ற போது குறைந்த பட்சம் மூன்று பேரூந்துகளில் பயணிக்க வேண்டியதும் அதனால் போக்குவரத்து நேரம் அதிகமாக தேவைப்படுகின்ற நிர்பந்தத்தை ஏற்படுத்துகின்றது.
மற்றும் 55 வயதை எட்டியவர்களுக்கும் கூட குறிப்பாக பெண் ஆசிரியர்களை இவ்விடமாற்றத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றது. மேலும்   வெளிவலயத்திற்கு செல்ல பணிக்கப்படுவோர்களில் பெரும்பாலனவர்களுக்கு குறித்த வெளிப்பிரதேசங்களில் அமைந்துள்ள பிரதான வீதிக்கு தூரப்படுகின்ற அளவில் அமைந்துள்ள பாடசாலைகளை குறிப்பிட்டு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதானது ஒரு வக்கிரமான போக்காகவே நாம் பார்க்கின்றோம். இவைகளை நாம் கல்வி அமைச்சரிடம் சுட்டிக்காட்டிய போது அவர் இதில் அநியாயம் நடந்திருக்கிறதுதான் என்று ஏற்றுக் கொண்டது மட்டுமன்றி உரிய நடவடிக்கை விரைவாக எடுப்பதாகவும் எம்மிடம் உறுதியளித்தரர்.
கிழக்கு மாகாண கல்வியமைச்சரின் செயலாளரை இடமாற்றம் பற்றி சந்தித்த போது, வழங்கப்பட்டிருக்கின்ற வருடாந்த இடமாற்றத்தை இரத்துச் செய்ய வேண்டிய அவசியத்தை வழியுறுத்திக் கூறினோம.; இதுபற்றி கவனத்தில் தான் எடுத்து தேவையான நடவடிக்கைகளை எதிர்வரும் 29.05.2017 இலிற்கு முன்னர் எடுத்து உங்களுக்கும் அறிவிப்பேன் என்று உறுதியளித்தார்.
கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு செயலாளரை சந்திக்கச் சென்ற போது அலுவலகத்தில் அவர் இருக்கவில்லை ஆயினும் அங்குள்ள உயர் அதிகாரி ஒருவரிடம் எங்களின் வருகையின் நோக்கத்தை தெளிவாக குறிப்பிட்டோம.; அவர் செயலாளரிடம் இவற்றை எடுத்துக் கூறுவதாகவும் சொன்னார். இச்சந்திப்புக்கு முன்னரே செயலாளருக்கு எம் அமைப்பினால் இடமாற்றம் குறித்தான முறைகேடுகளை விபரித்து கடிதம் ஒன்றை அனுப்பிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரச்சினைக்குரிய வருடாந்த இடமாற்றம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநருக்கு நாம் அனுப்பி வைத்திருந்த கடிதம் தொடர்பில் சந்தித்த போது, எமது கடிதம் குறித்து எடுக்கப்பட்டிருக்கின்ற நடவடிக்கை பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வியமைச்சின் செயலாளருக்;கு பணிப்புரை விடுத்திருப்பதை எம்மிடம் சுட்டிக்காட்டப்பட்டது. மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர், கல்வியமைச்சின் செயலாளர் உரிய  நடவடிக்கைகளை எடுக்கத் தவறுகின்ற சந்தர்ப்பத்தில் தான் நடவடிக்கை எடுப்பதாகவும் எமக்கு உறுதியளித்தார்.

எது எவ்வாறு இருந்த போதிலும் வழங்கப்பட்டிருக்கின்ற வருடாந்த இடமாற்றம் என்பதில் முறைகேடுகள் அதிகம் இருப்பதாக நாம் உறுதியாக நம்புகின்றோம். அத்தோடு இந்த இடமாற்றம் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகிய இரு தரப்பினர்களின் நலன்களிலும் பாதிப்புக்களை கொண்டுவரக்கூடியது என்பதாலும் இந்த இடமாற்றத்தை இலங்கை மகா ஆசிரியர் சங்கம் நிராகரிக்கின்றது. ஆகவே இடமாற்றம் இரத்துச் செய்வதில் எந்தத் தடைகள் வந்தாலும் அதனைக்கடந்துசென்று நீதியைப் பெறுவோம் என்ற நம்பிக்கை எம்மிடம் இருக்கின்றது' என அவர் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

 
Top