சமூகத்தில் அவர்களும் வாழ வேண்டும் அவர்களும் மனிதர்களே  என்ற கருப்பொருளை கொண்டதாக 
அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களை  சேர்ந்த   விசேட தேவையுள்ள மாணவர்களின்  திறமைகளை ஊக்குவிக்கும் திட்டத்தின்  கீழ்  டெபிளிங்  நிறுவனம் ஏற்பாடு செய்த ஒரு நாள் பயிற்சி செயலமர்வு நேற்று  கல்முனை கிறிஸ்தா இல்லத்தில்  நடை பெற்றது.

கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலை  ​அதிபர் வீ.பிரபாகரன் தலைமையில் இடம் பெற்ற இந்த  நிகழ்வில்  இந்த மாணவர்களின் திறனை வளர்க்கும் அடிப்படையில் திட்டமிடப்பட்ட   விளையாட்டு பயிற்சிகள் ,சிந்தனையை தூண்டும் செயற்பாடுகள் அடங்கிய நிகழ்ச்சிகள் அங்கு நடை பெற்றன .

கல்முனை மெதடிஸ்த திருச்சபை முகாமைக் குரு அருட்பணி எஸ்.டீ.வினோத் ,பொத்துவில் மெதடிஸ்த திருச்சபை சேகர குருவான டானியல் அழகுராஜா ,டெபிளிங்க் நிறுவன வடக்கு மாகாண இணைப்பாளர் ஜீ.கிருபைநாதன் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர் 

கருத்துரையிடுக

 
Top