முப்பது நாட்கள் பசித்திருந்து  நோன்பு நோற்று புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் உலக முஸ்லிங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்  கொள்கின்றேன்.

இந்த நோன்புப்  பெருநாள்​ முஸ்லிங்களிடையே ஐக்கியத்தையும் அமைதியையும் நிம்மதியையும் ஏற்படுத்தும் இனிய பெருநாள் தினமாக அமைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக் கொள்கின்றேன்.

கடந்த  ரமழானைப் போன்று இந்த ரமழானிலும் முஸ்லிங்களை அச்சமூட்டும் செயற்பாடுகளும் அச்சுறுத்தல்களும் இடம்பெற்றதைக் காணக்கூடியதாக இருந்தது,’

முஸ்லிங்களின் மதஸ்தலங்களின் மீதான தாக்குதல்கள்,வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் என தொடர்ச்சியாக முஸ்லிம் சமூகத்தைய அச்சமூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன

எனவே இதை ஒரு போதும்  ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுடன் அடுத்த நோன்பு காலத்திலாவது  முஸ்லிங்கள் நிம்மதியாக அச்சமின்றியும் தமது மார்க்கக் கடமைகளை முன்னெடுக்ககூடிய சூழ்நிலையை அரசாங்கம் தற்போதே ஏற்படுத்த முன்வரவேண்டும்,

கடந்த ஆட்சி காலத்தில் இடம்பெற்ற முஸ்லிங்களுக்கு எதிரான செயற்பாடுகளினாலேயே முஸ்லிங்கள் நல்லாட்சிக்கு தமது வாக்கினை அளித்தனர்.


ஆனால் இந்த ஆட்சியிலும் சில அரசியல்வாதிகளினது  ஆதரவுடன் இனவாதிகள் சுதந்திரமாக இனவாதக் கங்குகளை கக்கிய வண்ணம் வலம் வருவது ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது,

இது இந்த நல்லாட்சியை சீர்குலைக்க  சதிகார சக்திகள் முன்னெடுக்கும் திட்டங்கள் என்றால் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணும் பொலிஸார் இனவாதிகள் மீது நெகிழ்வுப் போக்கை கடைபிடிக்காமல் தராரம் பாராது  சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.

அவ்வாறில்லாமல் இனவாதத்தை முன்னெடுப்போர் மீது நெகிழ்வுப் போக்கு கடைபிடிக்கப்படுமேயானால் அதன் மூலம் இந்த அரசாங்கம்,காவற்துறை மற்றும் நீதித்துறை மீது மக்களின் நம்பிக்கை அற்றுப் போகும் நிலையே உருவாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எனவே முஸ்லிங்களை  இலக்குவைத்து  முன்னெடுக்கப்படும் இனவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து முஸ்லிங்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாவும் தமது மத சுதந்திரத்தையும் மார்க்கக் கடமைகளையும் முன்னெடுப்பதற்கான சூழலை இந்த அரசாங்கம் உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

கருத்துரையிடுக

 
Top