பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஹிஸ்புல்லாஹ் 


புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்கள் ஈத்முபாறக்! நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், ஒற்றுமை ஏற்பட இத்திருநாளில் விசேட துஆ பிரார்த்தனைகளில் ஈடுபடடுவதுடன், அதனை வாழ்வில் நடைமுறைப்படுத்த ஒவ்வொரு முஸ்லிமும் உறுதிபூண வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 
நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 
அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- 
புனித அல்குர்ஆன் உபதேசித்துள்ளது போன்று முஸ்லிம்கள் எவ்வாறான சூழ் நிலையிலும் பொருமையைக் கடைப்பிடிக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு சக்திகள் மும்முரமாக செயற்பட்டு வருகின்ற இக்காலப்பகுதியில் நாங்கள் மிகவும் கவனமாகவும், சமயோசிதமாகவும் செயற்பட வேண்டியுள்ளது. 
சமகாலத்தில் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் முஸ்லிம்கள் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இதற்கான தீர்வினை துஆக்கள் மூலம் பெற்றுக்கொள்ள ஈதுல் பித்ர் புனித நாளில் விசேட துஆப்பிராத்தனைகளிலும் முஸ்லிம்கள் ஈடுபட வேண்டும்;. 
குறிப்பாக ஒற்றுமை, நல்லிணக்கம், நிலையான சமாதானம், நாட்டின் அபிவிருத்தி போன்றவற்றுக்காகவும் முஸ்லிம்கள் பிரார்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும். 
பெருநாள் கொண்டாட்டங்கள் பிறமத சகோதரர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு மேற்கொள்ளும் அதேவேளை, நல்லிணக்கம் - புரிந்துணர்வுக்கான நாளாக அதனை அமைத்துக் கொள்ளவும் நாங்கள் முயற்சிக்க வேண்டும்.  – என அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

 
Top