சத்திர சிகிச்சை நிபுணர் ஏ.டபிள்யு.எம்.சமீம்  

பெற்றோர்களின் கவலையீனமான செற்பாடுகள் பிள்ளைகளின் உயிருக்கு கூட ஆபத்தை உண்டு பண்ணுகின்றது. பிள்ளைகளை சமூகத்தில் அந்தஸ்துள்ளவர்களாக மாற்றியமைப்பதற்காக  பெற்றோர்  காட்டுகின்ற  அக்கறை   குறிப்பாக தாய்மார்  பிள்ளைகளின்  உடல் ஆரோக்கியம் அவர்களது பாதுகாப்பு விடயங்களில் அக்கறை காட்டுவதில்லை என சத்திர சிகிச்சை நிபுணர் ஏ.டபிள்யு.எம்.சமீம்  தெரிவித்தார் .

அண்மைக்காலமாக  குறிப்பாக    வீடுகளில் பயன் படுத்தப் படுகின்ற அழகு சாதனப் பொருட்கள் மற்றும் வெளிநாட்டு விளையாட்டுப் பொருட்கள்  அழகுடன் வடிவமைக்கப் பட்டுள்ள ஊசிவகைகளை  சிறுவர்கள் விழுங்குகின்ற  ஒரு சாதாரண நிலை  காணப் படுகின்றது. இதனால்  பாதிக்கப் படும் குழந்தையும்  அக்குழந்தையின் பெற்றோர்களும்  பல துன்பங்களை அனுபவிக்கின்றனர் . வீட்டில் பயன் படுத்தப் படுகின்ற  பொருட்கள் உரிய இடங்களில் வைத்து பேணிப் பாதுகாப்பது. பெற்றோரின் கடமையாகும். கவலையீனமாக  பெற்றோர் செயல் படுவதினால்  பிள்ளைகளின்  உயிர் பிரிவதற்கு கூட  அவர்களே காரணமாகி விடுகின்றனர் .

தற்போது  பெண் பிள்ளைகள் பயன் படுத்துகின்ற அழகு சாதனப் பொருட்கள் கண்ணுக்கு கவர்ச்சியான  அமைப்பில் இனிப்பு பண்டங்கள் போன்று காணப்படுவதால்  குழந்தைகள் அதன்பால் கவனம் ஈர்க்கப்பட்டு அவ்வாறான பொருட்களை விழுங்கி விடுகின்ற நிலையை காண்கின்றோம் . இதனால் சிறு குழந்தைகளுக்கு பாரிய சத்திர சிகிச்சைகள் செய்ய வேண்டிய நிலை காணப் படுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் பல அண்மைக்காலமாக  அம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளதையும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப் பட்டு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப் பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் அந்தக் குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியம் பாதிக்கப் படுவது மட்டுமன்றி பெற்றோரின்  கவனயீனத்தால் அரசுக்கும் சுகாதாரத்துக்கென வீண் விரயம் ஏற்படுத்தப் படுகின்றது. ஒரு குண்டூசியின் விலை வெறும் ஐந்து சதமாக இருக்கும் போது  அந்தக் குண்டூசியை குழந்தை ஒன்று  விழுங்கி விட்டால் அந்தக் குண்டூசியை அகற்றி அக்குழந்தையின் உயிரைப் பாதுகாப்பதற்கு  பல சிரமங்களும் மத்தியில்  ,பலகோடி ரூபா  செலவுகளும் செய்ய வேண்டிய நிலை  சுகாதார திணைக்களங்களுக்கு ஏற்படுகின்றது என்று சத்திர சிகிச்சை நிபுணர் ஏ.டபிள்யு.எம்.சமீம்  தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்  இவ்வாறானதொரு சம்பவம் அண்மையில் கல்முனையில் இடம் பெற்றுள்ளது. ஆடைகளை உலர வைப்பதற்கு பயன் படுத்தப் படுகின்ற கிளிப்பொன்றை விழுங்கிய சிறுவன் ஒருவர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு  அங்கு சத்திர சிகிச்சை நிபுணரால் எண்டோஸ்கோபி  மூலம்  அந்தக் கிளிப் சிறுவனின் குடலில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. அதே போன்று பெண் பிள்ளைகள் அணிகின்ற அபாயா ஆடைக்கு பயன் படுத்துகின்ற கிளிப்கள் மாத்திரை வடிவில் பல நிறங்களில் அமைந்துள்ளதால்  மாத்திரை என்று அதனை விழுங்கியவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு சத்திர சிகிச்சைகளின்றி அவற்றை அகற்றிய சமப்வங்களும் இடம் பெற்றுள்ளன . இவ்வாறான  வைத்திய சேவைகளை  செய்கின்ற  வசதிகள்  கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இருப்பதனாலும்  அங்கு சிறந்ததொரு நிருவாக கட்டமைப்பு இருப்பதனாலும்  இவ்வாறான  சத்திர சிகிச்சைகளை  இங்கு அவசரமாக செய்து உயிர்களைக் காப்பாற்ற முடிகின்றது .

எனினும் வசதிகள் குறைந்த பிரதேசங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுகின்ற போது உயிராபாத்துக்கள் இடம் பெறுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதனாலும்  இவ்வாறான விடயங்களில் பெற்றோர் வீட்டு  சூழலை  பாதுகாத்து சிறார்களின் விடயத்தில் கவனமாக செயற்படுவது பெற்றோரின் கடமையுமாகும் என்று கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணர் ஏ.டபிள்யு.எம்.சமீம்  தெரிவித்தார் .

கருத்துரையிடுக

 
Top