மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை 07ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கந்தன் சிவராசா(வயது 52) என்ற மீனவர் முதலை கடித்ததில் காயமடைந்த நிலையில் ,கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு வாவியில், நேற்று மாலை(31) தோணியில் இருந்து மீன்பிடித்துக்கொண்டிருந்த போது பாரிய முதலையொன்று தோணியை அடித்துடைத்து தோணியை 05 அடி உரத்துக்கு உயர்த்தி தோணியில் இருந்த தன்னை வீழ்த்தி கடித்ததாக அம்மீனவர் தெரிவித்தார்.

காலில் பலத்த காயங்களுக்குள்ளான அந்நபர் அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஏனைய மீனவர்களால் காப்பாற்றப்பட்டு தற்போது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ,அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கருத்துரையிடுக

 
Top