கல்முனை கல்வி வலய  கல்விசாரா,கல்விசார் உத்தியோகத்தர்களும்,பாடசாலை அதிபர்களும் இணைந்து ஏற்பாடு செய்த  வருடாந்த இப்தார் நிகழ்வு  வலயக்  கல்விப்  பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில்  நேற்று (12) திங்கட் கிழமை வலயக்கல்வி அலுவலக முற்றவெளியில் நடை பெற்றது .
கல்முனை வலயக் கல்வி அலுவலக கணக்காளர் கே.ரிஸ்வி யஹ்ஸர் நெறிப்படுத்தலில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ .அப்துல் நிஸாம் உட்பட திணைக்களங்களின் தலைவர்களும் ,பிரதேச அரசியல் பிரமுகர்களும் , வலயத்துக்குட்பட்ட 65 பாடசாலைகளின் அதிபர்களும் மற்றும் உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் ,ஆசிரிய ஆலோசகர்கள் என பலர் கலந்து கொண்டனர்
கருத்துரையிடுக

 
Top