2018 ஆண்டில் அரசாங்க பாடசாலைகளின் தரம் ஒன்றில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
 
தரம் ஒன்றில் தமது பிள்ளைகளை சேர்த்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கும் பெற்றோர் அல்லது சட்டரீதியிலான பொறுப்பாளர்கள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்திற்கு அமைவாக தயாரிக்கப்பட்ட விண்ணப் படிவத்தை சம்பந்தப்பட்ட பாடசாலை தலைமை அதிகாரிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
 
விண்ணப்பங்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஏற்றுக கொள்ளப்படும். ஒரு வகுப்பிற்கு 33 மாணவர்கள் தெரிவு செய்யப்படுவதுடன்  செயற்பாட்டு பணியில் ஈடுபட்டுள்ள முப்படை மற்றும் பொலிஸ் உத்தியொகத்தர்களின் பிள்ளைகளுக்காக ஐந்து வெற்றிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

கருத்துரையிடுக

 
Top