ஒரு தசாப்தத்தின் பின்னர் நடை  பெற்ற நற்பிட்டிமுனை அல் -அக்ஸா  மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில்  மினா இல்லம் வெற்றிவாகை சூடிக் கொண்டது. 
கல்லூரி அதிபர் எம்.எல்.ஏ.கையூம் தலைமையில் கடந்த சனிக்கிழமை இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் நற்பிட்டிமுனை தலைவர் அஷ்ரப் மைதானத்தில் நடை பெற்றது. 

இந்த இல்ல விளையாட்டுப் போட்டியில்  மூன்று இல்லங்கள் கலந்து கொண்டன பச்சை நிற மினா இல்லம் , சிவப்பு  நிற ஸபா இல்லம் ,நீல நிற அரபா  இல்லம் . போட்டிகளின் அடிப்படையில் 694 புள்ளிகளைப்  பெற்று பச்சை நிற மினா இல்லம் முதலாம் இடத்தையும், 667 புள்ளிகளைப் பெற்று நீல நிற அரபா இல்லம் இரண்டாம் இடத்தையும் , 530 புள்ளிகளைப்  பெற்று சிவப்பு நிற சபா இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன 

நடை பெற்ற  இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப்  பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார் , கல்முனை வலையாக கல்வித் பணிப்பாளர் எம்.எஸ்.ஆயத்துல் ஜலீல் உட்பட பிரதிக்கல்வித் பணிப்பாளர்கள் ,உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் ,கோட்டக்  கல்விப்  பணிப்பாளர்கள் ,ஆசிரிய ஆலோசகர்கள் ,ஊர் தனவந்தர்கள் ,பெரியோர்கள் என மைதானம் நிறைந்த பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துரையிடுக

 
Top