ஏழு மாவட்டங்களில் அனர்த்த நிலை நிலவுகின்றது.
இன்று மழை குறைவடைந்திருந்த போதிலும் இரவுவேளையில் கடும் மழை பெய்தால் களனி கங்கையை அடுத்துள்ள கொழும்பு மற்றும் அண்டியுள்ள பிரதேசங்களில் 2016ம் ஆண்டில் ஏற்பட்டதிலும் பார்க்க பெரும் வெள்ளநிலமை ஏற்படக்கூடும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

களனி கங்கை , ஜின் கங்கை , நில்வள கங்கை , களுகங்கை ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டிய அனர்த்த நிலை குறித்து பாதுகாப்பாக இருக்குமாறு அரசாங்கம் கேட்டு;க்கொண்டுள்ளது.

16ஆயிரத்து 759 குடும்பங்களை சேர்ந்த 61 ஆயிரத்து 315 பேர் , 7 மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கை அனத்தத்தின் காரணமாக பாதிக்கபட்டிருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த இயற்கை அனர்த்தத்தின் காரணமாக இதுவரையில் 91 பேர் உயிரிழந்துள்ளனர். 110 பேர் காணாமல் போயுள்ளனர். 11 பேர் காயத்திற்குள்ளாகியுள்ளனர்.


இரத்தினபுரி மாத்தறை காலி ஹம்பாந்தோட்டை கம்பஹா மற்றும் கேகாலை அகிய மாவட்டங்களிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.


இருப்பிடங்களை இழந்துள்ளோரின் எண்ணிக்கை 53ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தற்பொழுது எதிர்கொள்ளப்பட்டுள்ள அனர்த்தத்திற்கு மத்தியில் அரசாங்கத்தின் தலையாய கடமை பாதிக்கப்பட்டவர்களை உயிர்களை பாதுகாத்து அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்சென்று தேவையான நிவாரணங்களை வழங்குமாறு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் அனைத்து நிருவகங்கள், முப்படை பொலிஸார் உட்பட அரசாங்கத்தின் சகல அதிகாரிகளும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி , காலி , மாத்தறை , கேகாலை , ஹம்பாந்தோட்டை , களுத்துறை , கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மண்சரிவு அனர்த்தங்களை கொண்ட இடங்களில் உள்ள மக்களை முடிந்தவரையில் அப்பகுதியிலிருந்து வெளியேறவேண்டும் என்று தேசிய கட்டட ஆய்வுப்பிரிவு தெரிவித்துளளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் 12 செயலக பிரிவுகளிலும் கேகாலை மாவட்டத்தில் 4 பிரதேச செயலக பிரிவுகளிலும் காலி மாவட்டத்தில் 6 பிரதேச செயலக பிரிவுகளிலும் களுத்துறை மாவட்டத்தில் 4 பிரதேச பிரிவுகளிலும் மாத்தறை மாவட்டத்தில் 4 பிரதேச செயலக பிரிவுகளிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 2 செயலக பிரிவுகளிலும் நுவரெலியா மாவட்டத்தில் 4 பிரதேச செயலக பிரிவுகளிலும் கண்டி மாவட்டத்தில் 1 பிரதேச செயலகத்திலும் இந்த அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல திணைக்களம் காலநிலை தொடர்பாக தெரிவிக்கையில் மழை தணிந்திருந்த போதிலும் இரவு நேரத்தில் கடும் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 46 மணித்தியால காலப்பகுதியில் தொடர்ந்தும் கடும் மழை பெய்யும் பட்சத்தில் இடர் மோசமடையும்.

பாதிக்கபபட்டவர்களை மீட்பதற்கும் உணவு மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்கும் பணி பிரதேச செயலக பிரிவின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடைகளை வழங்குவதாயின் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகம் மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து இதனை மேற்கொள்வது மிகவும் பொருத்தமானதாகும்.

இதனூடாக நிவாரணம் கிடைக்கவேண்டிய உரிய இடங்களுக்கு நிவாரணங்களை வழங்கமுடியும்.

கருத்துரையிடுக

 
Top