மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை உடனடியாக மூடிவிடுமாறு கோரியும் இன்று அம்பாறை மாவட்டத்தில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி இடம் பெற்றது.

அம்பாறை மாவட்ட அரச மருத்துவ மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்த இந்த மாபெரும் எதிர்ப்பு பேரணி கல்முனையில் நடை பெற்றது.

சங்கத்தின் தலைவர் எம்.நிதர்சனன் தலைமையில் இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்ட எதிரப்பு பேரணி கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை முன்பாக ஆரம்பித்து கல்முனை வடக்கு அதார வைத்தியசாலை வரை சென்று மீன்டும் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதான முன்றலில் பொதுக்கூட்டமும் நடை பெற்றது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்  பல் வைத்திய நிபுணர்கள் சங்கம், அரச ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் சங்கம் , இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் அம்பாறை மாவட்ட  முன்னணி சமூக சேவைகள் அமைப்புகளும் இணைந்து பங்கு கொண்ட இந்த எதிப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் பங்குபற்றி தங்கள் எதிர்ப்பினை தெரிவித்தனர்.

சுதந்திரமான மருத்துவ நலனில் தலையிடவேண்டாம், சுதந்திர மருத்துவக் கல்வியை வியாபாரம் செய்ம்யும்  ராஜித, எஸ்பி, கிரியல்ல செயற்பாடுகளை எதிர்ப்போம்  இலவசக் கல்வியை இல்லாமல் செய்யவேண்டாம் என்ற கோசங்களுடன் வாசகங்கள் ஏந்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

கருத்துரையிடுக

 
Top