அல் - அக்ஸா மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி 11 வருடங்களின் பின்னர் நாளை சனிக்கிழமை (06) நற்பிட்டிமுனை அஸ்ரப் விளையாட்டு மைதானத்தில் நடை பெறவுள்ளது.
நற்பிட்டிமுனை மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் ஒன்று இல்லாத நிலையில் 1993ஆம் ஆண்டு கல்லூரியின் அதிபராக இருந்த எஸ்.எச்.சமட் எடுத்துக் கொண்ட பெரு முயற்சி காரணமாக நற்பிட்டிமுனை இளைஞர்களின் விளையாட்டு ஆசையை நிறைவேற்றும் வகையில் முஸ்லீம் மையவாடியை மைதானமாக்கி அன்று முல்லைத்தீவு மாவட்ட அமைச்சராகவிருந்த கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.மன்சூரை பிரதம அதிதியாக அழைத்து இற்றைக்கு 24 ஆண்டுகளுக்கு முன்னர் மிக கோலாகலமாக அந்த இல்ல விளையாட்டுப் போட்டியை நடாத்திவைத்தார் . அந்த நிகழ்வு இன்றும் நற்பிட்டிமுனை மக்களால் மறக்கப்பட முடியாத நிகழ்வாகவும் பாராட்டக் கூடிய அதிபராக சமட் அதிபர் விளங்குகிறார் .
இதன் பின்னர் 2004 ஆம் ஆண்டு அதிபராக இருந்த ஏ.எம்.ஜமால்தீன் 11 ஆண்டுகளின் பின்னர் நற்பிட்டிமுனைக்கென அமர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபினால் அடையாளப் படுத்தப்பட்ட அஸ்ரப் மைதானத்தில் இல்ல விளையாட்டுப் போட்டியொன்றை நடத்தினார் . இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அப்போதைய கல்முனை வலையாக கல்விப் பணிப்பாளர் எம் .எச் . காதர் இப்ராஹீம் கலந்து கொண்டார் . கெளரவ அதிதியாக காத்தான்குடி பிரதேச செயலாளராக இருந்த மரஹும் ஏ.எல்.எம்.பளீல் பங்கு பற்றியிருந்தார் .
மீண்டும் 13 வருடங்களின் பின்னர் இன்று சனிக்கிழமை நவீனமயப்படுத்தப் பட்டுள்ள நற்பிட்டிமுனை அஸ்ரப் விளையாட்டு மைதானத்தில் கல்லூரி அதிபர் எம்.எல்.ஏ.கையூம் தலைமையில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நடை பெறுகிறது.
இந்த விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் பிரதம அதிதியாகவும் ,கெளரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் , விசேட அதிதிகளாக ஓய்வு பெற்ற முன்னாள் நீதி மன்ற நீதிபதி திருமதி மைமுனா அஹமட் மற்றும் கிழக்கு மாகாண பிரதம உள்ளக கணக்காளர் எச்.எம்.எம்.றசீட் உட்பட சிறப்பு அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வீ.மயில்வாகனம்,எஸ்.எல்.ஏ.ரஹீம்,எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மொலானா ,பீ .எம்.வை.அறபாத் முகைதீன் ,திருமதி.ஜிஹானா அலிப் ,பீ.எம் பதுறுதீன் ஆகியோரும் , கல்முனை வலயக் கல்வி அலுவலக கணக்காளர் கே.ரிஸ்வி யஹ்சர் ,கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சக்காப் ,நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய அதிபர் வை.எல்.ஏ.பஷீர் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர் .
இல்ல விளையாட்டுப் போட்டிகள் யாவும் கல்முனை வலயக் கல்வி அலுவலக உடற்கல்விக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.அப்துல் சத்தாரினால் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப் படும்.

கருத்துரையிடுக

 
Top