அம்பாறை மாவட்ட  அரச மருத்துவ மாணவர்கள்   சங்கம் ஏற்பாடு செய்துள்ள  சைற்றம்  எதிர்ப்பு பேரணி கல்முனையில் நடை பெறவுள்ளது.
சைற்றத்தை ஒழிப்போம் என்ற தொனிப் பொருளில் அம்பாறை மாவட்ட  அரச மருத்துவ மாணவர்கள்   சங்கதினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  எதிர்ப்பு பேரணி ஊர்வலம்   ஞாயிற்றுக் கிழமை (07)  காலை 8.00மணி தொடக்கம் 12.00மணிவரை நடை பெறவுள்ளதுடன்  கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை முன்பாக  எதிர்ப்பு ஊர்வலம் ஆரம்பித்து  கல்முனை  சந்தாங்கேணி மைதானம் வரை எதிர்ப்பு தெரிவிக்கும் ஊர்வலமாக செல்லவுள்ளதாக அம்பாறை மாவட்ட  அரச மருத்துவ மாணவர்கள்   சங்க செயலாளர் ஏ.எல்.வசீம் அகமட் தெரிவித்துள்ளார் .
இந்த எதிர்ப்பு பேரணியில்  அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்,அரச பல் வைத்திய நிபுணர்கள் சங்கம்,அரச ஆயுர்வேத மருத்துவ  அதிகாரிகள் சங்கம்,இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் அம்பாறை  மாவட்டதில் உள்ள  முன்னணி சமூக சேவை அமைப்புக்கள் பலவும் பங்கு பற்றவுள்ளதாக அரச மருத்துவ மாணவர்கள்   சங்க செயலாளர் ஏ.எல்.வசீம் அகமட் மேலும் தெரிவித்துள்ளார் .

கருத்துரையிடுக

 
Top