தினகரன் பத்திரிகை அம்பாரை மாவட்டத்தின் வரலாறுகள் அடங்கிய பொன்னிலம் பத்திரிகையை வெளியிட்டுள்ளது. இந்த வெளியீட்டு வீதி உலா நேற்று அம்பாறை மாவட்டம் பூராக நடை பெற்றது . தினகரன் பிரதம ஆசிரியர் கே.குணராசா தலைமையில் வீதி உலா எனது நற்பிட்டிமுனை மண்ணை தொட்ட போது சமூக சேவையாளர் நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவை அபிவிருத்தி அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் அவர்களின் ஏற்பாட்டில் நற்பிட்டிமுனை அல் - அக்ஸா மகாவித்தியாலய அதிபர் எம்.எல்.ஏ.கையூம் அவர்களின் தலைமையில் மகத்தான வரவேற்பு வழங்கப் பட்டது . 
வீதி இரு மருங்கிலும் மாணவர்கள் புடை சூழ "தினகரனை வாசிப்போம்" "தினகரனை வாழவைப்போம் " " அண்ணன் குணாவை போற்றுவோம் " என்று மாணவர்கள் ,ஆசிரியர்கள் கோஷத்துடன் வந்தவர்களை வரவேற்று மாலை அணிவித்து ,பொன்னாடை போர்த்தி, தினகரன் பிரதம ஆசிரியர் கே.குணராசாவிடம் இருந்து தினகரன் பத்திரிகை அம்பாரை மாவட்டத்தின் வரலாறுகள் அடங்கிய பொன்னிலம் பிரதிகளை ஒவ்வொருத்தரும் பெற்றுக் கொண்டனர் .
இந்த நிகழ்வில் நற்பிட்டிமுனை அல் - அக்ஸா மகாவித்தியாலய பிரதி அதிபர் வீ.எம்.ஸம்ஸம் , உதவி அதிபர் மௌலவி ஏ.எம்.சாலிதீன், நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலய அதிபர் வை.எல்.எம். பஷீர், பிரதி அதிபர் சி.எம்.நஜீப் ,நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவை அபிவிருத்தி அமைப்பின் செயலாளர் யு.எல்.எம்.பாயிஸ் உட்பட ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்து கொண்டனர்

தினகரன் பத்திரிகை அம்பாரை மாவட்டத்தின் வரலாறுகள் அடங்கிய பொன்னிலம் பத்திரிகையில் தாய் மண்ணின் மகிமையை எனது மாமா ஓய்வு பெற்ற சம்மாந்துறை பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உதவியாளரும் ,நற்பிட்டிமுனை வரலாற்றை எழுதிக் கொண்டிருப்பவருமான எஸ்.அஸீசுல்லாஹ் அவர்களின் உதவியுடன் " இன நல்லுறவின் எடுத்துக் காட்டாக நற்பிட்டிமுனை " என்ற தலைப்புடன் என்னால் எழுதப்பட்ட கட்டுரையை பிரசுரம் செய்த மரியாதைக்குரியவரும் ,நற்பிட்டிமுனை மண்ணின் மீது என்றும் மரியாதை கொண்டவருமான தினகரன் பிரதம ஆசிரியர் கே.குணராசா அவர்களுக்கும் இணை ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் .
குறிப்பு : பொன்னிலம் பத்திரிகை பிரதி தேவையான நற்பிட்டிமுனையை சேர்ந்தவர்கள் என்னை தொடர்பு கொண்டு பிரதிகளை பெறலாம்.


கருத்துரையிடுக

 
Top