அல்ஹாஜ் எம்.ஐ ஹபீப் முஹம்மட்(பெரியதம்பி முதலாளி)அவர்கள் இன்று காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்
அன்னார் மர்ஹூம்களான முஹம்மது இஸ்மாயில் மற்றும் மீரா உம்மாவின் மகனும், உம்மு சல்மாவின் அன்புக் கணவரும் மர்ஹூம் பத்தும்மா,முஹம்மட் காசீம்,முஹம்மட் யாஸீன் ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
மர்ஹூம் இஸ்ஸடீன்,ரஹீம்,அமீர் அலி,ஹரிஸ்(விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்),பாயிஸா,பாயிதா ஆகியோரின் அன்பு தகப்பனாரும் ஆவார்.
பொறியியலாளர் ஏ.சீ.எம்.அன்சார்(அவுஸ்திரேலியா),டாக்டர் ஏ.எல்.எப்.ரஹ்மான்(வைத்திய அத்தியட்சகர்-அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை)ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை அதாவது சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு கல்முனை நூராணியா தைக்கா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


கருத்துரையிடுக

 
Top