நிந்தவூரில் சாதாரண பரீட்சையில்  சாதனை படைத்த 31 மாணவர்கள்  சாதனை விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட்னர் .கடந்த வெள்ளிக்கிழமை நிந்தவூர் அல் -மஸ்கர்  பெண்கள் உயர்தர பாடசாலையில்  இவ்வைபவம் இடம் பெற்றது.

நிந்தவூர் கோட்டக் கல்விப்  பணிப்பாளர் திருமதி பீ.ஜிஹானா அலிப் தலைமையில் இடம் பெற்ற  நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப்  பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் பிரதம அதிதியாகவும் , கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கெளரவ அதிதியாகவும் , ஓய்வு பெற்ற முன்னாள் நிந்தவூர் கோட்டக்  கல்விப்  பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம் விசேட அதிதியாகவும் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.றஹீம் உட்பட உதவிக்கல்விப்  பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் ,அதிபர்கள் பெற்றோர்கள் ,நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர் .
இவ்வைபவத்தில்  கடந்த வருடம் நிந்தவூர் கோட்டத்தில்  சாதாரண பரீட்சையில்  திறமை காட்டி சாதனை படைத்த மாணவர்கள் 31 மாணவ மாணவிகள் பாராட்டி கெளரவிக்கப் பட்டனர் .
கருத்துரையிடுக

 
Top