இவ்வருடத்திற்கான (2017) கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றுவோரிடமிருந்து இன்று முதல் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
 
பரீட்சைக்கு தோற்றவுள்ளோர், இன்று (04) முதல் எதிர்வரும் மே 31 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள், தங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
 
இவ்வருடம் எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்ப படிவங்கள், தபால் மூலம் அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு, தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான மாதிரி விண்ணப்ப படிவங்கள் மற்றும் பரீட்சை நிலையங்கள் தொடர்பான விபரங்கள் இன்றைய (04) தினகரன் பத்திரிகையில் பார்வையிடலாம்.
 
 
 
 
 
 

கருத்துரையிடுக

 
Top