நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாப் 
(பி.எம்.எம்.ஏ.காதர்)

கற்பித்தலின் நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்கள் இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையில் கற்பித்து பல மாணவர்களை உருவாக்கிய பெருமை நல்லாசான் ஓய்வு  பெற்ற அதிபர் ஏ.எல்.எம்.தாஹிர் அவர்களையே சாரும் என ஏ.எல்.எம்.தாஹீர் அதிபரின் மாணவரும் மன்னார்  மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கான மேல் நீதிமன்ற நீதிபதியுமான தாவூத் லெப்பை அப்துல் மனாப் தெரிவித்தார்.
ஓய்வு  பெற்ற அதிபர் ஏ.எல்.எம்.தாஹிர் அவர்களின் சேவையைப் பாராட்டி அவரிடம்  கற்ற மாணவர்கள் அமைப்பான மருதமுனை ஷம்ஸ் உயர்தர வட்டம்  ஏற்பாடு செய்த மகிழ்ச்சிப் பிரவாக விழா ஞாயிற்றுக்கிழமை (16-04-2017)மருதமுனை அல்-மதீனா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது இங்கு உரையாற்றி போதே நீதிபதி இவ்வாறு தெரிவித்தார். 
ஓய்வு  பெற்ற ஏ.எல்.எம்.தாஹிர் அதிபரின் மாணவரான கிழக்கு மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏ.எல்.எம்.தாஹிர் அதிபரிடம் உயர்தரம் கற்ற மாணவர்களும் அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாப் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது
 அப்போது வசதிகளும்.வளங்களும் குறைந்த நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறையுடன் ஷம்ஸ் மத்திய கல்லூரி இயங்கியது இந்த நிலையில்தான் அப்போது ஆசிரியராக இருந்த தாஹிர்  சேர் ஒரே நேரத்தில் வர்த்தகப் பிரிவுக்கான நான்கு பாடங்களையும் எங்களுக்குக் கற்பித்தார். 
அவரிடம் கற்ற நாங்கள் அனைவரும் இன்று உயர்பதவிகளுடன் நல்ல நிலையில் இருக்கின்றோம் .அவரின் அணுகுமுறை மாணவர்களை கவர்ந்திளுக்கும் தன்மை கொண்டது.அதனால் எல்லா மாணவர்களும் விரும்பிக்கற்கின்ற நிலை இருந்தது இதனால்தான் நாங்கள் நன்றாகக் கற்று கல்வியில் உயர்ந்திருக்கின்றோம்  என்றார். 
இங்கு கிழக்கு மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் தலைமையுரையாற்றுகையில் :- 38 வருடங்களுக்கு முன் இந்த இடத்திலே என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் எங்கள் கல்வியைத் தொடர்ந்தோம்.எந்த வசதி வாய்ப்புக்களும் இல்லாத நிலையில்தான் அக்காலம் இருந்தது அப்போதுதான் தாஹிர் சேர் எங்களுக்கு ஆசிரியரானார்.
எங்கள் வகுப்பிலே இருந்த மாணவர்களை ஒவ்வொருவராக இனங்கண்டு அதற்கேற்றவாறு எங்களுக்கான கற்பித்தலைச் செய்தார்கள்  எல்லாவற்றையும்  அளவிடுவதற்கு அளவு  கருவிகள் இருக்கின்றன ஆனால் மனிதனின் மனதை அளவிடுவதற்கு எந்த அளவு  கருவிகளும் இல்லை.ஆனால் எங்கள் ஆசிரியர் ஒவ்வொருவருடைய மனதையும் அளந்து அதற்கேற்றவாறு எங்களை வழிநடாத்தினார்.
எங்கள் தாஹிர் சேருடைய தியாகம் இப்போது எங்களை உயர் பதவிகளில் அமர்த்தியிருக்கின்றது 38 வருடங்களுக்குப்பின் நாங்கள் காலம் தாழ்த்தி இந்த கௌரவிப்பை செய்திருக்கின்றோம்  எங்கள் ஆசான் அப்போது எங்களை எப்படி கவனித்தார்களோ அப்படியே இறுதிவரை கவனிக்க வேண்டும். எங்கள் ஆசான் நீண்ட ஆயூளோடு  வாழ வேண்டும் என நாங்கள் அனைவரும் பிரார்த்திற்கின்றோம் . என்றார்.
இந்த நிகழ்வில் தாஹிர் அதிபருக்கு மாலைகள் அணிவித்து வரவேற்று, வாழ்த்துப் பத்திரங்கள் வாசித்து வழங்கி,பொன்னாடைகள் போர்த்தி நினைவுப் பரிசுப்பொதிகளும் வழங்கி வாழ்த்தி கௌரவிக்கப்பட்டார். ஓய்வு  பெற்ற ஏ.எல்.எம்.தாஹிர் அதிபரின் பாரியாரும் குடும்பத்தினரும், ஷம்ஸ் உயர்தர வட்டத்தின் உறுப்பினர்களும் குடும்பங்களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.   

         

கருத்துரையிடுக

 
Top