கடந்த வருடம் ஐந்தாம் தர புலமை பரீட்சையில் சித்தி பெற்ற நற்பிட்டிமுனை மாணவர்களுக்கு நற்பிட்டிமுனை அல் - கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் கெளரவிப்பு நிகழ்வு அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் தலைமையில் 2016.11.08 நடை பெற்ற போது அந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்வி ராஜாங்க அமைச்சர் வீ . ராதா கிருஷ்ணன் மாணவர்களுக்கு நினைவு சின்னம் வழங்கி வைத்தார் .
அவர் அன்று அந்த நிகழ்வில் உரையாற்றும் போது நற்பிட்டிமுனை சாதனை மாணவர்களுக்கு எனது பரிசாக பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பத்தையும் அன்றய தினம் பாராளுமன்றில் மதிய உணவையும் வழங்கி கெளரவிப்பேன் என்றும் அதற்கான ஏற்பாட்டினை தம்பி ஹலீம் ஏற்பாடு செய்யும் படியும் வாக்குறுதி வழங்கினார் .
கல்வி ராஜாங்க அமைச்சர் வழங்கிய வாக்குறுதி கடந்த திங்கட் கிழமை (17)நிறைவேற்றப் பட்டுள்ளது . " நற்பிட்டிமுனை சாதனையாளர்களின் பாராளுமன்றம் நோக்கிய பயணத்தில் " சாதனை மாணவர்கள் 10 பேரும் அவர்களது பெற்றோர்களும் ,உறவினர்களும் ,ஆசிரியர்கள் மற்றும் நற்பிட்டிமுனை அல் - கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் உறுப்பினர்களுமாக 40 பேர் கொண்ட குழுவினர் பாராளுமன்றம் மற்றும் பல இடங்களைப் பார்வையிட்டு திரும்பியுள்ளனர் .
கடந்த திங்கட் கிழமை (17) மாலை நற்பிட்டிமுனை அல் - கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் காரியாலயத்தில் இருந்து அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் தலைமையில் புறப்பட்ட குழுவினர் மறுநாள் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் , யுத்தத்தில் மரணமடைந்த இராணுவ ,பொலிஸ் வீரர்களின் நினைவு தூபி ( நற்பிட்டிமுனை வீரர்களின் பெயர்கள் பார்வையிடப்பட்டது), அபே கம ,பத்தரமுல்ல பூங்கா ,தெஹிவளை ,காலிமுக திடல் என்பன பார்வையிடப் பட்டன.
பாராளுமன்றத்தைப் பார்வையிடும் வாய்ப்பு எமக்கு அரிதாக இருந்த சந்தர்ப்பத்தில் எங்களுடைய குழந்தைகளின் அர்ப்பணிப்புக்காக இந்த ஏற்பாட்டை செய்து பாராளுமன்றத்தை பார்ப்பதற்கு வசதியையும் ,அன்றய தினம் காலை உணவையும் அனைவருக்கும் வழங்கிய கல்வி ராஜாங்க அமைச்சர் வீ.ராதா கிருஷ்ணன் அவர்களுக்கும் ,அனைவருக்கும் அன்றய மதிய உணவையும் ,அமைப்பின் அங்கத்தவர்கள் பாராளுமன்றைப் பார்வையிட அனுமதியும் பெற்றுக் கொடுத்த கைத்தொழில் வணிக அமைச்சர் றிசாத்பதியுதீன் அவர்களுக்கும் ,அன்றய இரவு உணவை அனைவருக்கும் வழங்கிய நெடா அமைப்பின் பணிப்பாளரும், மை ஹோப் நிறுவனத்தின் தவிசாளருமான சித்தீக் நதீர் அவர்களுக்கும் ,பயணித்த அனைவருக்கும் அபே கம கிராமத்தை பார்வையிடுவதற்கு நுழைவு சீட்டை பெற்றுத்தந்த ரீஸ்மா மோட்டோர்ஸ் உரிமையாளர் நற்பிட்டிமுனை காசிம் பாவா பஸீல் அவர்களுக்கும் ஒட்டு மொத்தமாக இந்தப் பயணத்துக்கான ஏற்பாட்டுக்கு முழுமையான உதவி புரிந்த நற்பிட்டிமுனை அல் - கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் அவர்களுக்கும் நன்றியை தெரிவிப்பதாக கலந்து கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்தனர்கருத்துரையிடுக

 
Top