காணாமல் போய் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ள நான்கு மீனவர்கள் உள்ளிட்ட இயந்திரப் படகினை மாலைதீவு  கடற்பரப்பில் தேடுவதற்கான நடவடிக்கை எடுப்பதற்கும் மாலைதீவு  அரசின் பாதுகாப்பில் உள்ள மீனவர்கள் இருவரையும் ஆழ்கடல் இயந்திரப் படகினையும் மீட்பதற்கும் அந்நாட்டு உயர் அதிகாரிகளை சந்திப்பதற்கு  விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்  சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் நாளை (7) சனிக்கிழமை அதிகாலை மாலைதீவு பயணமாகிறார்.

கல்முனை பிரதேசத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்று காணமல் போன இரண்டு ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப் படகுகள் மற்றும் 6 மீனவர்களுள் இரண்டு மீனவர்கள் மற்றும் ஒரு இயந்திரப் படகு என்பன மாலை தீவில் கரையொதுங்கி தற்போது அவர்கள் மாலைதீவு அரசின் பாதுகாப்பில் உள்ளனர். ஏனைய நான்கு மீனவர்கள் உள்ளிட்ட இயந்திரப்படகு மாலைதீவு கடற்பரப்பில் தத்தழிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மேற்குறித்த விடயம் தொடர்பாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் நாளை அதிகாலை மாலைதீவு நாட்டுக்கு பயணிக்கவுள்ளார். இவ்விஜயத்தின்போது அந்நாட்டு அரச உயர் அதிகாரிகளை சந்தித்து மாலைதீவு அரசின் பாதுகாப்பில் உள்ள இரண்டு மீனவர்கள் மற்றும் ஒரு இயந்திரப் படகு என்பவற்றை நாட்டிற்கு கொண்டுவருவதற்கும் ஏனைய நான்கு மீனவர்கள் உள்ளிட்ட இயந்திரப்படகினை மாலைதீவு நாட்டு கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு பிரிவின் உதவியூடன் மாலைதீவு கடற்பரப்பில் தேடுவதற்கும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் நடவடிக்கை எடுக்கவுள்ளார்.


கருத்துரையிடுக

 
Top