கல்முனை வலயக் கல்வி அலுவலக மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வித்தியாரம்ப விழா கல்முனைக்குடி அல்- அஸ்ஹர் வித்தியாலயத்தில் நடை பெற்றது.

கல்லூரி அதிபர் ஏ.எச்.அலிஅக்பர் தலைமையில் நடை பெற்ற விழாவில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

கல்லூரிக்கு வருகை தந்த முதலாந்தர  மாணவர்களை இரண்டாந்தர மாணவர்கள் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

மாணவர்களின் கலை நிகழ்வூகள் இடம் பெற்றதுடன் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளும்இ பெற்றௌர்களும் விழாவில் கலந்து கொண்டனர்கருத்துரையிடுக

 
Top