இவ்வருடம் நடை பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற நற்பிட்டிமுனை மாணவர்கள் 10 பேரை கெளரவிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (04) நற்பிட்டிமுனை அல் - அக்ஸா மகாவித்தியாலய ஆராதனை மண்டபத்தில் நடை பெற்றது .
 MANS சமூக சேவை அமைப்பின் தவிசாளரும் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான AHHM.நபாரின் வழிகாட்டலில் MANS சமூக சேவை அமைப்பின் தலைவர் JM.அயாஸ் தலைமையில் நடை பெற்ற  இப்பாராட்டு விழாவில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் MS.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகவும் , கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்திய அதியட்சகர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் ,கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே .லியாகத் அலி ,கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி ,சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் , நற்பிட்டிமுனை உலமா சபை தலைவரும் கல்முனை அல் -ஹாமியா அரபுக் கல்லூரி அதிபருமான யு.எல்.ஏ.கபூர் மௌலவி,  ஆகியோர் நிகழ்வில் கெளரவ அதிதிகளாகவும் கலந்து  கொண்டனர் 

கருத்துரையிடுக

 
Top