40 வருடங்களுக்கு  முற்பட்ட கல்முனை  இலங்கை வங்கி கிளை கட்டிடம்  புனரமைப்பு செய்யப் பட்டு  நவீன வசதிகளுடன்  இயங்க ஆரம்பித்துள்ளது.

35ஆயிரம்  வங்கி வாடிக்கையாளர்களுடன் இயங்கும் கல்முனை  இலங்கை வங்கி கிளை கல்முனை பிரதேசத்தில்  வாடிக்கையாளர்களின்  நன்மை கருதி 24 மணி நேரமும்  இயங்கக் கூடிய வகையில் பணபரிமாற்ற  சேவையும்  முதல் தடவையாக  கல்முனை பிரதேசத்தில்  பண வைப்பு தன்னியக்க  இயந்திர சேவையும்    (CDM) இலங்கை வங்கி கிளையில்   இன்று  (10) ஆரம்பித்து வைக்கப் பட்டது.

கல்முனை  இலங்கை வங்கி கிளை முகாமையாளர்  எம்.ஏ.சத்தாரின்  வழி காட்டலில் பண வைப்பு தன்னியக்க  இயந்திர சேவை ஆரம்ப விழா  முகாமையாளர் ஐ.எம். முனவ்வர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப் பட்டன .அம்பாறை மாவட்டப்  பிராந்திய முகாமையாளர்  ஜீ.ஏ.எல்.ரத்னஜீ  மற்றும் பிரதம முகாமையாளர்  ஜெ.எம்.ஜீ.பண்டார  ஆகியோர்  அதிதிகளாக கலந்து கொண்டு  இயந்திரத்தை  திறந்து ஆரம்பித்து வைத்தனர்.


 பணம் மீள பெறும்  இயந்திரம் (ATM) கல்முனை வங்கி கிளையில் மேலதிகமாக  இரண்டு   பொருத்தப்  பட்டு இயங்கவுள்ளதுடன்,  கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலை வளாகத்தில்  வாடிக்கையாளர்களின் வசதி கருதி  பணம் மீள பெறும்  இயந்திரம் (ATM) பொருத்தப் படவுள்ளது என  கல்முனை  இலங்கை வங்கி கிளை முகாமையாளர்  எம்.ஏ.சத்தார் தெரிவித்தார்


கருத்துரையிடுக

 
Top