புதிய அரசியலமைப்புத் தொடர்பில் இடைக்கால அறிக்கைகள் இரண்டு அடுத்த மாதம் வெளிவர உள்ளது. அடுத்த மாதத்தின் நடுப் பகுதியில் முதலாவது அறிக்கையும் மாதத்தின் இறுதியில் இரண்டாவது அறிக்கையும் வெளிவர உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த மாதத்தின் நடுப் பகுதியில் உப குழுக்களின் தொகுக்கப்பட்ட அறிக்கையும் மாதத்தின் இறுதியில் வழிநடத்தல் குழுவின் அறிக்கையும் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட உள்ளன.
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான நாடாளுமன்றம் கடந்த மார்ச் மாதம் அரசியலமைப்பு நிர்ணயச் சபையாக மாற்றப்பட்டது. இதன் பின்னர் நாடாளுமன்றத்தில் உள்ள சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 6 உப குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதற்கு மேலதிகமாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வழி நடத்தல் குழுவும் அமைக்கப்பட்டது.
உப குழுக்கள் 6 இனதும் அறிக்கைகள் தொகுக்கப்பட்டு முதலாவது இடைக்கால அறிக்கை அடுத்த மாதத்தின் நடுப் பகுதியான 16 ஆம் திகதி அளவிலும், வழி நடத்தல் குழுவில் ஆராயப்பட்ட அதிகாரப் பகிர்வு நாட்டின் தன்மை, தேர்தல் முறைமை, நிறைவேற்று அதிகாரம் ஆகிய விடயங்களை உள்ளடக்கிய அறிக்கை மாதத்தின் இறுதியிலும் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top