வாழ்வின் எழுச்சி  திணைக்களத்தினால்  இவ்வாண்டு முன்னெடுக்கப் படும்  வாழ்வாதார  செயற்றிடத்தின் கீழ்  திவிநெகும  பயனாளிக் குடும்பங்களைச் சேர்ந்த வேலையற்றிருக்கும்  இளைஞர்களுக்கான  தொழில் வழி காட்டல்  பயிற்சி வழங்கப் பட்டு அவர்களுக்கான சான்றிதழ் வழங்கல் , வறிய  குடும்பங்களுக்கு பலன்தரும்  மரக்கன்றுகள் வழங்கல் , திரிச பியச  திட்டத்தில் நிர்மாணிக்கப் பட்ட வீடு கையளிப்பு, சுயதொழிலுக்கான கடன் வழங்கல்  போன்ற நிகழ்வுகள்  இடம் பெற்றன .
இளைஞர்களுக்கான இந்தப்  பயிற்சி நெறி  ஹை டெக்  லங்கா நிறுவனத்தினால்  வழங்கப் பட்டது .  இப்பயிற்சி நெறிக்கு தெரிவு செய்யப்பட்ட  கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  30 இளைஞர்கள்   ஹை டெக்  லங்கா  நிறுவனத்திற்கு அனுப்பி  வைக்கப் பட்டு ஒரு மாத கால  கனரக வாகனப் பயிற்சியை முடித்து வந்துள்ளனர் 

இந்த  நிகழ்வு  கல்முனை பிரதேச செயலகத்தில்  திவிநெகும தலமைப் பீட முகாமைத்துவ  பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்  தலைமையில் இடம் பெற்ற  போது  பிரதேச செயலாளர்  எம்.எச்.எம்.கனி  பிரதம அதிதியாகவும்  மற்றும்  திவிநெகும  அதிகாரிகளும்   பயிற்சி பெற்ற  இளைஞர்களும், வாழ்வாதார உதவி பெறுவோரும் ,  பெற்றோர்களும் கலந்து கொண்டனர் .  

குறிப்பாக  இந்த வறுமை ஒழிப்பு தினத்தை  ஊர்ஜிதப்ப படுத்தும் வகையில்  இரு குடும்பத்தலைவர்  தாமாக முன் வந்து  தங்களின் பொருளாதாரத்தில்  முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்து  சமுர்த்தி  உதவி பெறும்  முத்திரைகளை பிரதேச செயலாளரிடம் ஒப்படைத்தனர்    


   

கருத்துரையிடுக

 
Top