(யு.எம்.இஸ்ஹாக் )

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானம் சகல வசதிகளுடன் கூடிய மைதானமாக அபிவிருத்தி செய்யும் அபிவிருத்தி அங்குரார்ப்பண விழா நாளை  2016.10.09ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லினை நட்டு  வைக்கவுள்ளார்.
சந்தாங்கேணி விளையாட்டு மைதானம் சகல வசதிகளுடன் கூடிய உள்ளக அரங்கு, நீச்சல் தடாகம், நவீனமான முறையிலான மெய்வல்லுனருக்கான ஓடுபாதை என்பன நிர்மாணிக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் நகர திட்டமிடல், நீர்வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான ரவூப் ஹக்கீம் கௌரவ அதிதியாகவும், சிறு கைத்தொழில் அமைச்சர் தயா கமகே, பிரதி அமைச்சர்களான பைசால் காசீம், அனோமா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர், ஏ.கே.கோடீஸ்வரன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் உள்ளிட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வை முன்னிட்டு கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் வட மாகாண அணிக்கும் கிழக்கு மாகாண அணிக்குமிடையிலான மாபெரும் உதைப்பந்தாட்ட சமர் கண்காட்சிப் போட்டி இடம்பெறவுள்ளதுடன் பாடசாலை மாணவர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

கருத்துரையிடுக

 
Top