நற்பிட்டிமுனை அல் அக்ஸா மகா வித்தியாலயத்திலிருந்து இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி தேர்வு செய்யப் பட்ட  பசில் றீமா (157 ) , லியாக்கத் லிபாஸ் (156 ) ஆகிய இரு மாணவர்களையும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும் நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமுக சேவை அமைப்பின் தலைவரும் ,அமைச்சர் றிசாத் பதியுதீனின்  அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான  சி.எம்.ஹலீம்  பாராட்டி கெளரவித்து  பணப் பரிசும் வழங்கினார்.

கல்லூரி அதிபர் எம்.எல்.ஏ.கையூம் தலைமையில் நடை பெட்ரா நிகழ்வொன்றில்  கலந்து கொண்டு இந்தக் கெளரவிப்பை   மாணவர்களுக்கு  வழங்கினார் .  இந்த கெளரவிப்பு  இடம் பெற்ற  சந்தர்ப்பத்தில்  கோட்டக் கல்விப் பணிப்பாளர்  ஏ.எல்.சக்காப் ,உட்பட  பலர் கலந்து கொண்டனர் 


கருத்துரையிடுக

 
Top