ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் இன்று கொழும்பு  லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இவ் ஆசிரியா்கள் தொண்டா் ஆசிரியா்களாக நியமனம் பெற்று ரூபா 6 ஆயிரம் சம்பளத்தை பெறுவதாகவும் தமக்கு சம்பளத்தை அதிகரிக்குமாறும் கோரியே இவ்வாறு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனா்.
தாங்கள் ரூபா 6 ஆயிரத்தையே பெறுவதாகவும் கடந்த வருடம் ஜூலை மாதம் தமக்கு ரூபா 10 ஆயிரம் தருவதாக சென்ன அரசாங்கம் இதுவரை வழங்க வில்லை எனத் தெரிவித்து இன்று (05) கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இருந்து ஜனாதிபதி அலுவலகம் வரை ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனா்.
அத்துடன் ஜனாதிபதி அலுவலக மேலதிக செயலாளரை சந்தித்து தமது மனுவை ஒப்படைத்தனா். 


 

கருத்துரையிடுக

 
Top