(பி.எம்.எம்.ஏ.காதர்)

மருதமுனையைச் சேர்ந்த ஏ.ஆர்.எம்.சாலிஹ் கொஸ்டாரிக்கா(மத்திய அமெரிக்கா)சான் யூவான் பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாக முதுமானி பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்து பட்டச்சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்.சர்வதேச தொழில் கற்கைகளுக்கான மதிப்பீட்டு நிறுவனத்தின் வர்த்தகமானி மற்றும் முதுமானி கற்கைகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை மாலை(28-10-2016)கொழும்பில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் மண்டபத்தில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக் கலந்து கொண்ட சுவிட்சிலாந்து நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான  தூதுவர் கலாநிதி ஹெயின்ஸ் வொக்கர் நெடர்கோணிடமிருந்து ஏ.ஆர்.எம்.சாலிஹ் பட்டச்சாண்றிதழைப் பெற்றுக் கொண்டார்.
இவர்; கல்முனை பிரதேச செயலகத்தில் திவிநெகும சிரேஷ்ட தலைமைப்பீட முகாமையாளராக் கடமையாற்றுகின்றார்.மருதமுனை கலை இலக்கியப் பேரவையின் தலைவராகவும், மருதமுனை  3ஆம் பிரிவு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் இணைத் தலைவராகவும்க,ல்வி மற்றும் சமூக சேவைகளுக்கானஅமைப்பின் வாழ்வாதாரப் பணிப்பாளராகவும்  மேலும் பல அமைப்புக்களில் பல பதவிகளையும் வகித்துக் கொண்டு சமூக சேவையிலும் ஈடுபட்டு மக்களுக்குச் சேவையாற்றிவருகின்றார்.
இவர் மருதமுனையைச் சேர்ந்த இஸ்மாயில் விதானயாரின் இளைய மகள் மைமூனா உம்மா,இப்றாலெப்பை மரைக்காரின் மகன் அப்துல் றஹீம் தம்பதிக்கு 1965ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி மருதமுனையில் பிறந்தார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை 1970ஆம் ஆண்டு மருதமுனை அல்ஹம்றா வித்தியாலயத்தில் ஆரம்பித்தார்.பின்னர் இடைநிலைக் கல்வியை 1975ஆம் ஆண்டு மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் ஆரம்பித்து 1986ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்று 1987ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு பௌதீக விஞ்ஞான பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.பின்னர் கிழக்கில் ஏற்பட்ட இனப்பிரச்சினை காரணமாக கொழும்பு பல்கலைக் கழகத்திற்கு இடம் பெயர்ந்த மாணவனாக இணைக்கப்பட்டு அங்கேயே தனது பௌதீக விஞ்ஞானத் துறையில் இளமானிப் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்தார்.
பின்னர் 1994ஆம் ஆண்டு சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட சமூர்த்தித் திட்டத்தில் சமூர்த்தி முகாமையாளராக நியமனம் செய்யப்பட்டார்.இவரது சேவைத் திறனை அடிப்படையாகக் கொண்டு பிரதேச செயலக தலைமை சமூர்த்தி முகாமையாளராக நியமிக்கப்பட்டார்.அன்று தொடக்கம் இன்று வரை இவர் பல பிரதேச செயலாளர்களின் நன் மதிப்பைப் பெற்ற சிரேஷ்ட தலைமைப்பீட முகாமையாளராக நேர்மையுடனும் வினைத் திறனுடனும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சமூர்த்தித் திட்டத்தில் வருமானம் குறைந்த குடும்பங்களின்  வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில் எந்த வித எதிர்பார்ப்புக்களுமின்றி அர்ப்பணிப்புடன் சேவையாற்றி மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்றுள்ளார்.

கல்முனை நியூஸ் இணையதளமும் இவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறது 

கருத்துரையிடுக

 
Top