உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட பின்தங்கிய பாடசாலையான நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய மாணவர்களின் வலய மட்டத்திலான பிரதான விளையாட்டு விழா இன்று நற்பிட்டிமுனை அஸ்ரப் சதுக்க மைதானத்தில் நடை பெற்றது.

 நற்பிட்டிமுனை அல்-கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக  அபிவிருத்தி அமைப்பின் பூரண  அனுசரணையுடன்  அதிபர் திருமதி ஜெஸ்மினா ஹாரிஸ் தலைமையில் காலையில் மைதான  சுவட்டு விளையாட்டு நிகழ்வுகளும்  மாலையில் கலை நிகழ்கவுளும் சிறுவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகளும்  இடம் பெற்றன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கைத்தொழில் வணிக அமைச்சின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் நற்பிட்டிமுனை அல்-கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக  அபிவிருத்தி அமைப்பின் தலைவருமான சீ.எம்.ஹலீம் சிறுவர்களை  மகிழ்வூட்டும் வகையில்  இனிப்பு வழங்கி மகிழ்வித்ததுடன் கற்றல் உபகரணங்களும் பரிசாக வழங்கி வைத்தார்.
அதிபர்க ,பிரதி அதிபர், ஆசிரியர்கள் , கல்லூரியின் பழைய மாணவர்கள் ,ஊர் மக்கள்  பலரின் ஒத்துழைப்புடன்  சிறப்பாக  நடை பெற்ற   சிறுவர் தின நிகழ்வைக் கண்டு கழிக்க  பொது மக்கள் பலர்  மைதானத்தில் திரண்டிருந்தனர் .


மைதானத்தில்  இடம் பெற்ற  விளையாட்டு  நிகழ்வுகள்  நட்பிட்டிமுனை விளையாட்டு ஆசிரியர்கள் பங்கு பற்றலுடன் இடம் பெற்றதுடன் நட்பிட்டிமுனை  அறிவிப்பாளர்கள்  வீ.மக்பூல் ,ஐ.எல்.நிரோஸ்   ஆகியோரால் நிகழ்வுகள் யாவும்  தொகுத்து வழங்கப் பட்டன .
குறிப்பு- மேலும் பல புகைப்படங்களும் , வீடியோவும்  சற்று நேரத்தில் பார்க்க முடியும் 


கருத்துரையிடுக

 
Top