வலயக்  கல்விப்  பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல்  ஜலீல்  பாராட்டு 


ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சை  முடிவுகளின்படி கல்முனை கல்வி  வலயத்தில் 324 மாணவர்கள்  சித்தியடைந்துள்ளனர் . கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில்  பாரிய முன்னேற்றம்  ஆரம்பக் கல்வியில்  கல்முனை கல்வி வலயம்  அடைந்துள்ளதாக  கல்முனை வலயக்  கல்விப்  பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல்  ஜலீல் தெரிவித்தார்.

கல்முனை கல்வி வலயத்தில் உள்ள  ஐந்து கோட்டங்களிலும்  முஸ்லீம் கல்விக் கோட்டத்தில் அதி கூடிய மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் , அதன் பிரகாரம்  கல்முனை முஸ்லீம் கோட்டத்தில் -114 ,தமிழ் கோட்டத்தில்-99, நிந்தவூர் கோட்டத்தில்-39,காரைதீவு கோட்டத்தில்-37,சாய்ந்தமருது கோட்டத்தில்-35 மாணவர்கள்  சித்தியடைந்துள்ளனர் .

கடந்த வருடம்  ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில்  கல்முனை வலயத்தில்  214 மாணவர்கள்  சித்தியடைந்தனர் . கடந்த ஆண்டுடன்  ஒப்பிடும்  போது  கல்முனை கல்வி வலயம்  பாரிய வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் . இந்த வளர்ச்சிக்கு  காரணமாக இருந்த  கிழக்கு மாகாண கல்விப்  பணிப்பாளரின் வழி  காட்டாலும் , கல்முனை வலையாக கல்வி அலுவலக  பிரதிக் கல்விப்பாளர்கள் ,உதவிக்கல்விப்  பணிப்பாளர்கள் , கோட்டக்  கல்விப்  பணிப்பாளர்கள் , மற்றும் ஆசிரிய ஆலோசகர்களின் ஒத்துழைப்பும் கல்லூரிகளின் அதிபர்கள்,ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் இந்த வெற்றியில் மாணவர்களின்  பெற்றோரது  பங்களிப்பு அளப் பெரியது    என்று வலயக்  கல்விப் பணிப்பாளர் ஜலீல் தெரிவித்தார் 


கருத்துரையிடுக

 
Top