மலையக  கலை கலாச்சார சங்கம் ஏற்பாடு  செய்துள்ள அண்ணல் மகாத்மா காந்தி  நினைவு தின விழா  நாளை திருகோணமலையில் நடை பெறவுள்ளது.

இதன் போது  கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 16 பேருக்கு ரத்ன தீபம் விருதும் ,16 பேருக்கு  மகாத்மா காந்தி விருதும்  வழங்கப் படவுள்ளது. இதில் அம்பாறை மாவட்டத்தைப்  பிரதிநிதித்துவப் படுத்தி ஊடகத்துறை ,சமூகசேவை மற்றும் ஆசிரியர்  சேவை புரிந்த  நற்பிட்டிமுனையை சேர்ந்த  ஆறு பேருக்கு இரத்தின தீபம் விருது வழங்கப் படவுள்ளது.

திருகோணமலை  சர்வோதய  அமைப்பின் முகாமைத்துவாளர் தேசாபிமானி விஸ்வகீர்த்தி  வேல்முருகு ஜீவராஜ் தலைமையில் இடம் பெறும் நிகழ்வில்16 பேருக்கு இரத்னதீபம் விருது வழங்கப் படவுள்ளது.

ஒடடமாவடி பிரதேச செயலாளரும் ,பன்னூலாசிரியருமான எம்.எம்.நௌபல் தலைமையில் இடம் பெறும் நிகழ்வில் 16 பேருக்கு  மகாத்மா காந்தி விருதும்  வழங்கப் படவுள்ளது.

  திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ண சிங்கத்துக்கு "தேசாபிமான விஷ்வாகீர்த்தி" விருது வழங்கி கெளரவிக்கப் படவுள்ளது.


கருத்துரையிடுக

 
Top