(முன்னோடிப் பரீட்சையில்   சித்தியடைந்த மருதமுனை அல் -ஹம்றா மாணவன்
 பதூர்டீன் மிஷால் அஹமட் நினைவு சின்னம்  பெறுவதைக் காணலாம் )
இவ்வாண்டுக்கான  தரம்  5 புலமைப் பரிசில்  பரீட்சை   நடை பெறுவதற்கு முன்னர்  மருதமுனை  சமூக நலன்புரி அபிவிருத்தி  அமைப்பு (சுவேடோ  ஸ்ரீலங்கா ) நடாத்திய  முன்னோடிப் பரீட்சையில்  சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும்  வருடாந்த நிகழ்வு   அந்த அமைப்பினால் கடந்த 02.10.2016 ஞாயிற்றுக் கிழமை மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி  திறந்தவெளியரங்கில்  அமைப்பின் தலைவர்  எம்.ரீ.எம்.ஹாறூன்  தலைமையில் நடை பெற்றது.

இந் நிகழ்வில்  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்  பிரதம அதிதியாகவும், சம்மாந்துறை  அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த  ஆதார வைத்திய சாலையின்  சத்திர சிகிச்சை நிபுணர் DR.A.W.M. சமீம் கெளரவ அதிதியாகவும்  மற்றும் கல்முனை மாநகர ஆணையாளர் ஜெ.லியாகத் அலி உட்பட  பல  அரசியல் பிரமுகர்களும் , அதிபர்கள்,ஆசிரியர்கள் உள்ளிடட  கல்வியியலாளர்களும்  மாணவர்களின் பெற்றோர்களும் ,அமைப்பின் உறுப்பினர்கள் பலரும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

இந்த நிகழ்வில்  முன்னோடிப் பரீட்சையில் 140 புள்ளிகளுக்கு மேற்படட 68 மாணவர்கள் பாராட்டப் பட்டனர் .கருத்துரையிடுக

 
Top