ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின்  நிதியிலிருந்து நற்பிட்டிமுனை ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் புனர்நிர்மாணப் பணிகளுக்கான இரண்டாம் கட்ட நிதி  ரூபா 5இலட்சம்  இன்று பள்ளிவாசல் நிருவாகிகளிடம்  வழங்கப் பட்டது 

 இந்த  நிதி வழங்கும் நிகழ்வு இன்று (10) சனிக்கிழமை பிரதி அமைச்சர் ஹரீஸின் கல்முனைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிதி விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் நற்பிட்டிமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் எம்.ஐ.அமீர் ஊடாக நற்பிட்டிமுனை ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் அஷ்-ஷெய்க் மௌலவி எம்.நாசர் கனி தலைமையிலான பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் கையளித்து வைக்கப்பட்டது.
தலைவர் ரவூப் ஹக்கீம்  நட்பிட்டிமுனை ஜூம்ஆப் பள்ளிவாசல் புனர்நிர்மாணப் பணிக்கு இதுவரை 15இலட்சம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

- ஊடகப் பிரிவு -

கருத்துரையிடுக

 
Top