தேசிய நீர் வழங்கல்  வடிகாலமைப்பு  சபையில்  நீண்ட காலமாக கடமையாற்றி  ஓய்வு பெற்ற  நிலைய  பொறுப்பதிகாரி  எஸ்.எல்.ஏ.மஜீத்  அவர்களுக்கு  பிரியாவிடை  வைபவம் இடம் பெற்றது .

இவர்  நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய  காலத்தில்  இவரின் கீழ்  பணி  புரிந்த  சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் எட்டுப்  பேர்   இணைந்து  இந்தப் பிரியாவிடை வைபவத்தை  ஏற்பாடு செய்தனர் .

மானி  வாசிப்பாளர்  எஸ்.எம்.முஸம்மில் தலைமையில் ஒலுவில் கிறீன்  வில்லா  விடுதியில் கடந்த சனிக்கிழமை (17.09.2016) நடை பெற்ற  பிரியாவிடை வைபவத்தில்  எம்.எஸ்.எம்.கடாபி (எழுதுனர் ), ஏ.எஸ்.பாரிஸ் (மானி வாசிப்பாளர் ),எஸ்.எம்.ஹனூஸ் (மானி வாசிப்பாளர் ),ஏ.எச்.எம்.புவாட் (மானி வாசிப்பாளர் ),எம்.ஏ.எம்.இல்யாஸ் (மானி வாசிப்பாளர் ),எம்.ஐ.எம்.ஹாரிஸ் (மானி வாசிப்பாளர் ),எம்.எஸ்.றியாஸ் (மானி வாசிப்பாளர் ) ஆகியோரும் அவர்களின் குடும்ப  உறுப்பினர்களும்  கலந்து கொண்டு  சிறப்பித்தனர்.
தேசிய நீர் வழங்கல்  வடிகாலமைப்பு  சபை கல்முனை  நிலைய  பொறுப்பதிகாரியாகவும்  சாய்ந்தமருது   நிலைய    பொறுப்பதிகாரியாகவும்  கடமையாற்றி ஓய்வு பெற்ற எஸ்.எல்.ஏ.மஜீத்  மற்றும் அவரது குடும்பத்தினரும்  நிகழ்வில் கலந்து கொண்டதுடன்  இவரின் கீழ் கடமை புரிந்தவர்களால் நினைவு சின்னம்  வழங்கி கெரவிக்கப் பட்டன.

கருத்துரையிடுக

 
Top