கிழக்கின் அனைத்து முஸ்லிம் அரசியல் தலைமைகளை ஒன்றிணைத்து புத்திஜீவிகளின் அனுசரனையுடன்
செப் 16ம் திகதி மேற்க்கொள்ளப்படும் முஸ்லிம் சுய நிர்ணய உரிமைப்பிரகடணம் முஸ்லிம் தேசியத்தின் ஒட்டுமொத்த உரிமைகளையும் அபிலாஷைகளையும் அபிவிருத்திகளையும் உள்ளடக்கிய பெரும் கோட்பாடாகும்.
இந்நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் பாதுகாப்புடனும் கௌரவத்துடனும் வாழுவதற்கான ஒட்டுமொத்த உரிமைகளை உள்ளடக்கும் ஒற்றை செல்லே 'சுயநிர்ணயமாகும்

அடிமை விலங்கை உடைத்தெறிந்து நம்மை நாமே ஆழவேண்டும் என்ற ஐ.நாவால் உத்தரவாதமளிக்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளுக்கு இலங்கை முஸ்லிம் தேசியமும் உரித்துடையது என்பதை மீள்பிரகடணம் செய்வதே கிழக்கின் எழுச்சியின் நோக்கமாகும். எந்தவொரு முஸ்லிம் தேசிய எழுச்சிக்கும் மக்களின் கணிசமான அங்கீரம் பெற்ற முஸ்லிம்களின் பேரியக்கமான முஸ்லிம் காங்கிரஸின் தனித்தலைமையை வேறு பல காரணங்களுக்காகவும் ஒதிங்கி வழிவிடுமாறு வினையமாய் வேண்டினோம்.
மு.காவின் ஸ்தாபிப்பில், அதன் அடிப்படை கொள்கை பகுப்பில் பெரும் பங்களிப்பு செய்த ஸ்தாபகர்களின் அனுசரனையுடன் முன்னெடுக்கப்பட்ட கிழக்கின் எழுச்சியின் இரண்டாம் கட்ட நகர்வை சகோதரர் அதாவுள்ளாஹ் 'சுதந்திரக்கிழக்கு என்ற கோசனையுடன் முன்னெடுத்து செல்கிறார் என்பது மிகவும் ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகிறது. அவ்வாறே மூன்றாம் கட்ட நடவடிக்கையாக முஸ்லிம் சுயநிர்ணயப் பிரகடணத்தை செப் 16ம் திகதி கிழக்கின் எழுச்சி மேற்கொள்ளவுள்ளது. இம்மூன்றாம் கட்ட முன்னெடுப்பை, அதன் இலக்குகள் நோக்கிய செயற்பாடுகளை கிழக்கின் எழுச்சியின் பல் துறை திறமைகள் கொண்ட ஆளுமைமிக்க இளம் தலைமைத்துவத்தின் கீழ் தொடந்தெடுத்துச்செல்லப்படும்
புதிய தலைமைகளை அடையாளம் கண்டு அவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைத்து ஆலோசனை வழங்கிக்கொண்டும் கண்காணித்துக்கொண்டும் இருப்பதை வழிமுறையாக்குவதில் கிழக்கின் எழுச்சி முன்மாதிரியாய் இருக்க விரும்புகிறது.

தலைமைத்துவ மாற்றங்கள் தேவையின் நிமித்தம் நிகழவேண்டிய நிதர்சனமான நிகழ்வேயன்றி மரணத்தில் மாத்திரம் நிகழ்வதாய் இருக்ககூடாது. இக்குறுகிய காலத்துக்குள் ஏற்ப்பட்டுள்ள முஸ்லிம் மக்களின் மீள் விழிப்புணர்ச்சியின் அடிப்படை உரிமையை கிழக்கின் எழுச்சி கொண்டுள்ளது என்பதை பொறுப்புணர்வுடன் பிரகடணம் செய்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம். இப்பேரெழுச்சியை முன்னெடுத்துச்சென்று முஸ்லிம் தேசியத்தை நிலைநிறுத்த எம்முடன் கைகோர்க்குமாறு முஸ்லிம் தேசியத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களையும் அன்பாய் அழைக்கின்றோம்
-வபா பாறுக்-
ஸ்தாபகர்
கிழக்கின் எழுச்சி

கருத்துரையிடுக

 
Top