கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை ஆசிரியை ஒருவரின் வீட்டில்  நில  அதிர்வு  உணரப்  பட்டுள்ளது. இதனால்  ஆசிரியையின்  வீட்டு  தளத்தில்  வெடிப்பு ஏற்பட்டு  தளத்தில்  பதிக்கப் பட்டிருந்த தரை ஓடுகள் (Tiles)   உடைந்து சிதறியுள்ளதுடன் , வீட்டின் முன்னால்  உள்ள சுற்றுமதிலின்  ஒரு பகுதியிலும் சிறிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த  சம்பவம்  கல்முனை -03 ஆனை  கோயில்  வீதியில்  விவேகானந்தா தமிழ் வித்தியாலயம்  முன்பாக உள்ள  வீட்டிலேயே  இடம் பெற்றுள்ளது. இன்று இரவு 8.45 மணிக்கு  இடம் பெற்றதாக  வீட்டு உரிமையாளரான  ஆசிரியை தெரிவித்தார் .

சம்பவம் தொடர்பாக  ஆசிரியை  பெற்றிக்  உஷா  என்பவர் கூறுகையில்  எனது பிள்ளைகள்  படித்துக் கொண்டிருந்தார்கள் .நான்  பாடசாலை வேலை  செய்து கொண்டிருந்தேன் அந்த வேளை  வீட்டுக்குள் பட பட வென்ற சத்தம்  கேட்டது  அந்த வேளை   வீட்டுக்குள் சற்று நடுக்கம் போன்று  உணர்வு ஏற்பட்டது .  அதே கணம் வீட்டுக்குள் தரைக்குப்  பாதிக்கப் பட்டிருந்த  தரை ஓடுகள் அரை அடி  உயரத்துக்கு  மேலே கிளம்பி உடைய தொடங்கின . சம்பவத்தை பார்த்த நான்  அச்சம் காரணாமாக  எனது பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு  வீட்டை விட்டு வெளியேறி விட்டேன் . வெளியே வந்து பார்த்த போது  சுற்று மதிலிலும்   வெடிப்பு  காணப் பட்டது.கருத்துரையிடுக

 
Top