நட்பிட்டிமுனை  லாபீர் வித்தியாலயத்தில்  நீண்ட கால  குறையாக  இருந்து வந்த  ஆங்கில ஆசிரியர்   இல்லாத குறைக்கு  கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால்  தீர்வு வழங்கப் பட்டுள்ளது..

கடந்த 30.08.2016 அன்று  ஆங்கில ஆசிரியர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார் . இந்த விடயத்தில்  முழுக்க கவனத்தையும் எடுத்து  ஆசிரியர்களை  நியமிக்க  நடவடிக்கை எடுத்த  கிழக்கு மாகாண  கல்விப்  பணிப்பாளர்  எம்.ரீ.நிஸாம் , மேலதிக மாகாண கல்விப்  பணிப்பாளர் எஸ்.மனோகரன் ,கல்முனை வலையக்  கல்விப்  பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்  ஆகியோருக்கு    நட்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பு  ஊடாக  அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம்  நன்றி  தெரிவித்து கடிதம் அனுப்பி வைத்துள்ளார் 


கருத்துரையிடுக

 
Top